kamran ghulam cricinfo
கிரிக்கெட்

அஸ்வின் பாராட்டிய பாகிஸ்தான் வீரர்.. மீண்டும் சதமடித்து அசத்தல்! 2-1 என ஜிம்பாப்வேவை வீழ்த்திய PAK!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.

Rishan Vengai

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதல் போட்டி நவம்பர் 24ம் தேதி நடைபெற்ற நிலையில், ஜிம்பாப்வே அடித்த 205 ரன்களை அடிக்க முடியாமல் 60 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி.

கம்ரான் குலாம்

இந்நிலையில் படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்று ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான்.

அஸ்வின் பாராட்டிய வீரர் மீண்டும் சதம்..

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் அசாமுக்கு பதிலாக அறிமுகமான 3-ம் நிலை வீரரான கம்ரான் குலாம், அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார். அவருடைய ஆட்டத்தை இந்தியாவின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விளாசிய குலாம் 99 பந்தில் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார்.

குலாமின் சதத்தின் உதவியால் 303 ரன்கள் குவித்த பாகிஸ்தான், ஜிம்பாப்வேவை 204 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து அபாரவெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. முகமது ரிஸ்வான் தலைமையில் தொடர்ச்சியாக இரண்டாவது ஒருநாள் தொடர் வெற்றியை பதிவுசெய்துள்ளது பாகிஸ்தான்.