hardik pandya in csk ai edit
கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் ருதுராஜ் போகிறாரா?? பகீர் கிளப்பிய முன்னாள் வீரர்!

ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு வருகிறாரா என்ற பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Rishan Vengai

சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத், ஹர்திக் பாண்டியா-ருதுராஜ் கெய்க்வாட் டிரேட் சரியான முடிவாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். மும்பை-சிஎஸ்கே அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன என அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு OG ஐபிஎல் அணிகளுக்கும் கடந்த 3 ஐபிஎல் தொடர்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை. ஒருபக்கம் தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு எங்கப்பா சிஎஸ்கேவை காணோம் என்ற விதத்தில் தான் சூப்பர் கிங்ஸ் இருந்துவருகிறது.

மறுபக்கம் கடப்பாரை அணி என பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸின் நிலைமையோ கவலைக்கிடமாக இருந்துவருகிறது. கடைசியாக 2020-ல் கோப்பை வென்ற அந்த அணி படுமோசமான ஐபிஎல் சீசன்களையே கடந்துவந்துள்ளது.

CSK, 2026

இந்தசூழலில் இரண்டு அணிகளும் அவர்களுடைய புதிய அணியை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இரண்டு அணிகளின் பயிற்சியாளர்கள் குழு மொத்தமாக புதியதாக மாற்றப்பட்டுள்ள நிலையில், இரண்டு அணியும் முக்கியமான டிரேட் பேச்சுவார்த்தையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேட்டு மும்பையிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ஹர்திக்பாண்டியா சிஎஸ்கேவிற்கு வந்தால், அவருக்கு பதிலாக ஆயுஸ் மாத்ரே, ஷிவம் துபே, கலீல் அகமது போன்ற வீரர்களை மும்பை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது.

dhoni - hardik pandya

இந்நிலையில் தான் ஏன் ஹர்திக் பாண்டியா - ருதுராஜ் கெய்க்வாட் டிரேட் நடக்கக்கூடாது என்ற கேள்வியை சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் பத்ரிநாத் எழுப்பியுள்ளார். ஹர்திக் பாண்டியா வந்தால் கேப்டன்சி கொடுக்கவேண்டிய சூழல் இருக்கும்போது, ஹர்திக் பாண்டியா, ருதுராஜை மாற்றிக்கொள்வது சரியான டீலாக இருக்கும் என கூறியுள்ளார். அதேபோல தோனி ஹர்திக் பாண்டியாவிடம் பேசியிருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனால் மும்பை-சிஎஸ்கே அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.