dhoni - hardik pandya instagram
கிரிக்கெட்

சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஹர்திக் பாண்டியா? ஹிண்ட் கொடுத்த ஜாகீர் கான்! Decode செய்த ரசிகர்கள்!

சிஎஸ்கே ரசிகர்கள் டிரேட் குறித்த பேச்சு மற்றும் பதிவுகளை டிகோட் செய்துவரும் நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சரியாக 10:33 மணிக்கு போட்ட பதிவு இணையத்தையே பரபரப்பாக்கியுள்ளது.

Rishan Vengai

சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில் ஜாகீர் கான் டிரேட் அப்டேட் குறித்து வெயிட் பண்ணுங்கள் என கூறியதை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மஞ்சள் ஜெர்சிக்கு வரப்போகிறார் என டிகோட் செய்துள்ளனர். 33 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு, பாண்டியாவின் வருகை உறுதியாகும் என அவர்கள் நம்புகின்றனர்.

’வெயிட்டிங்லயே வெறி ஆகாது; சீக்கிரம் சொல்லுங்கப்பா’ என ரசிகர்கள் ஆர்வத்தின் உச்சிக்கே செல்லும் வகையில் தான், டிராட் குறித்த அப்டேட் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ளது. ’எக்ஸாம் டென்சன விட டிரேட் டென்சன் அதிகமா இருக்கே’ என புலம்பும் ரசிகர்கள், ஹர்திக் பாண்டியா மஞ்சள் ஜெர்சிக்கு வந்துவிட்டதாகவே ஹைப் ஏற்றி வருகின்றனர்.

CSK IPL 2023 Finals

2023ஆம் ஆண்டு கோப்பை வென்றதற்கு பிறகு 2024, 25, 26 என அடுத்தடுத்த 3 சீசன்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியாக செல்லவில்லை. பல குறைகள், பல குழப்பங்கள், சொந்த மைதானத்தில் படுதோல்விகள் என எல்லாமே இறங்குமுகமாகவே சென்றது. இந்தசூழலில் தான் 2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முந்தைய பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் மொத்தமாக வெளியேற்றப்பட்டு, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

conway-ruturaj

சுடசுட பல அப்டேட்களை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு பயிற்சியாளராக மோஹித் சர்மா, உதவி பயிற்சியாளர்களாக ஆல்பி மோர்கல், கேரத் பேட்டி போன்றவர்களின் நியமனத்தை வெளியிட்டது. இவர்களுடன் சேர்த்து முந்தைய பயிற்சியாளர் குழுவிலிருந்த துணை பவுலிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஸ்ரீராம் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஃபாஸ்டர் இருவரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா வருகிறார்? Decode செய்த ரசிகர்கள்!

இதற்கிடையில் அடுத்த அப்டேட் என்ன? என்பது போல தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கானை வைத்து சிஎஸ்கே வெளியிட்ட வீடியோவில், டிரேட் குறித்து அப்டேட் சொல்லுங்க என லியோ கேட்பது போல் காட்சி இடம்பெற்றது. அதற்கு ஜாகீர் கான் வெயிட் பண்ணுங்க என சொல்லிவிட்டு செல்கிறார். ஆனால் வீடியோவில் டிரேட் குறித்து அப்டேட் வேண்டும் என கேட்கப்பட்ட கார்டின் கார்னரில், 33 என்ற நம்பர் ரவுண்ட் செய்யப்பட்டது போல் மங்கலாக இருக்கிறது. அது ஹர்திக் பாண்டியாவின் ஜெர்சி நம்பர் என்றும், சிஎஸ்கேவிற்கு பாண்டியா வரப்போகிறார் எனவும் டிகோட் செய்த சென்னை ரசிகர்கள் அதை வைரலாக மாற்றினர்.

ஒருபக்கம் ரசிகர்கள் இதை அதிகமாக கமெண்ட் செய்துவந்த நிலையில், மீண்டும் ஒரு பதிவிட்ட சிஎஸ்கே நிர்வாகம் அதை சரியாக 10.33 மணிக்கு பதிவிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் 33 என மீண்டும் உறுதிசெய்திருப்பதாகவும், அப்போ கண்டிப்பா ஹர்திக் பாண்டியா மஞ்சள் ஜெர்சிக்கு வருகிறார் எனவும் கருத்திட்டு வருகின்றனர்.

பாண்டியா வந்தால் 2 வீரர்கள் இழப்பு!

ஜாகீர் கான் வீடியோவை பொறுத்தவரை சிஎஸ்கே ஒரு பெரிய டிரேடில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. அது ஒருவேளை ஹர்திக் பாண்டியாவாக இருந்தால், வெளியான தகவல்களின் படி அவருக்கு பதிலாக சிஎஸ்கே 2 வீரர்களை இழக்கவேண்டியிருக்கும். மும்பை ஒரு நிரந்த இந்திய ஓபனரை தேடிவருவதால், ஆயுஸ் மாத்ரேவே அவர்களின் டார்கெட் என்றும், அவருடன் சேர்த்து ஷிவம் துபேவும் கேட்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மற்றொருபுறம் ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவால்ட் பிரேவிஸ் 2 பேரையும் மும்பை கேட்டதாகவும் சொல்லப்பட்டது. இரண்டு வீரர்களை அனுப்பிவிட்டு ஹர்திக் பாண்டியாவை மட்டும் வாங்குவது எந்தளவுக்கு சாதகமாக இருக்கும் என்பது சந்தேகமே.

எப்படியிருப்பினும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர் சிஎஸ்கேவிற்கு வந்தால் அது மிகப்பெரிய பலமாகவும், பவுலிங் ஆல்ரவுண்டர், ஃபினிசர் இல்லை என்ற மிகப்பெரிய குறையே சிஎஸ்கேவிற்கு நீங்கிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.