ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் IPL
கிரிக்கெட்

IPL FINAL| கில், சுதர்சன் அடுத்தடுத்து OUT.. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ஆர்சிபி!

2026 ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

Rishan Vengai

அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதியில், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்த ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் தொடக்க வீரர்கள் கில், சுதர்சன் ஆகியோரை விரைவில் வெளியேற்றி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஹசல்வுட் பவுன்சரில் கிலை 10 ரன்னில் அவுட் செய்தார்; புவனேஷ்குமார் சுதர்சனை 12 ரன்னில் வெளியேற்ற, 7.4 ஓவரில் 55/2 என குஜராத் தடுமாறுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்த ஐபிஎஸ் தொடர் கடைசி நாளை எட்டியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியும், சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திவரும் குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.

2026 ஐபிஎல் இறுதிப்போட்டி

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுதர்சன் மற்றும் கேப்டன் கில் இருவரும் அதிரடியாக தொடங்கினர்.

நடப்பு சீசனில் தலா 700 ரன்கள் அடித்திருக்கும் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் இறுதிப்போட்டியில் அதே ஃபார்மை தொடர்வார்கள் என எதிர்ப்பார்த்த நிலையில், ஜோஷ் ஹசல்வுட் ஒரு அற்புதமான பவுன்சர் மூலம் கேப்டன் சுப்மன் கில்லை 10 ரன்னில் வெளியேற்றினார். தொடர்ந்து மாடர்ன் ஐபிஎல் ரன் மெஷினாக இருந்துவரும் சாய் சுதர்சனை 12 ரன்னுக்கு புவனேஷ்குமார் வெளியேற்ற டைட்டன்ஸ் அணி தங்களுடைய மெய்ன் பேட்டர்கள் இருவரையும் இழந்து மோசமாக தொடங்கியுள்ளது.

ஆர்சிபி 2026

தற்போதைய அப்டேட்டின் படி 7.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களுடன் குஜராத் விளையாடிவருகிறது. பட்லர் மற்றும் நிஷாந்த் சிந்து வரும் விளையாடிவருகின்றனர்.