தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 84 ரன்களை எடுத்துள்ளது. மெக்ஸ்வீனி 38 ரன்களுடனும், லபுஷேன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக கவாஜா 13 ரன்களில் பும்ரா பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
44.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது இந்திய அணி. மிச்சல் ஸ்டார்க் ஆறு விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார். இந்திய அணி சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன்களும்; கே எல் ராகுல் 37 ரன்களும் ; கில் 31 ரன்களும் அடித்தனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு தலைமை பொறுப்பேற்ற 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கம்மின்ஸ் பந்துவீச்சில் ரிஷப் பன்ட் அவுட். 35 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் பன்ட் அவுட். 138 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த இந்தியா.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ரிஷப் பந்த் 15 ரன்களுடன் நிதிஷ் ரெட்டி ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
பொறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த கில்லும் அவுட். போலாண்ட் வீசிய பந்தை கில் மிஸ் செய்ய, LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார். 51 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கில்.
ராகுலைப் போலவே கோலியும் தன் விக்கெட்டை இழந்திருக்கிறார். அவுட்சைட் ஆஃப் லைனில் வந்த பந்தை அடிக்கலாமா, வேண்டாம கோலி யோசித்து ஒரு முடிவு எடுப்பதற்கு, பந்து பேட்டில் பட்டு செகண்டு ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் சென்றது.
ராகுல் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஸ்டார்க். ஸ்டார்க் வீசிய பந்து பேட்டில் பட்டு பறக்க, அது தாவிப் பிடித்தார் கல்லியில் நின்று கொண்டிருந்த மெக்ஸ்வீனி. 19 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய அணி
ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் LBW முறையில் அவுட்டானார். Plumb Wicket என்பதால், ரிவ்யூவை வீணாக்காமல் வெளியேறினார் ஜெய்ஸ்வால்.