4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் என்கிற வலுவான நிலையில் ஆஸ்திரேலியா இருக்கிறது. இந்திய அணியின் ஸ்கோரான 180ஐ விட 11 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது ஆஸ்திரேலியா. 63 பந்துகளை சந்தித்த டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து களத்தில் இருக்கிறார்.
ரிஷ்ப் பண்ட்டின் சிறப்பான கேட்ச்சால், தன் விக்கெட்டை இழந்தார் ஸ்டீவ் ஸ்மித். 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி. மூன்று விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறார் பும்ரா.
இன்றைய ஆட்ட நாள் ஆரம்பித்ததும், விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருக்கிறார் பும்ரா. 39 ரன்களுடன் களத்தில் இருந்த மெக்ஸ்வீனியின் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா. இந்தியா அணி 84 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருக்கிறது.