Yashasvi Jaiswal Twitter
கிரிக்கெட்

”என் குடும்பத்தைப் பற்றி யாராவது தவறாகச் சொன்னால்..” ஜெய்ஸ்வால் ஆவேஷம்!

”என் குடும்பத்தைப் பற்றி யாராவது களத்தில் தவறாகச் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Prakash J

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்காகக் களமிறங்கிய இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ரகானே தலைமையில் துலீப் டிராபி தொடரில் ஜெய்ஸ்வால் விளையாடினார். அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த ரவி தேஜாவை, ஜெய்ஸ்வால் எல்லை மீறி ஸ்லெட்ஜிங் செய்தார். இதனால் கோபமடைந்த கேப்டன் ரஹானே, ஜெய்ஷ்வாலை உடனடியாக களத்தில் இருந்து வெளியேற்றினார். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஷ்வால் தற்போது பதிலளித்துள்ளார். அவர், “கிரிக்கெட்டில் சற்று ஆக்ரோஷமாக இருப்பது முக்கியம். நானும் களத்தில் மனதளவில் ஆக்ரோஷமாகத்தான் இருப்பேன்.

Jaiswal

ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாது. துலீப் டிராபியின்போது ரவி தேஜாவை நான் அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரை ஸ்லெட்ஜிங் கிரிக்கெட்டின் அங்கமாகிவிட்டது. சாதாரணமாக தெருக்களில் ஆடப்படும் கிரிக்கெட்டில் கூட ஸ்லெட்ஜிங் இருக்கும். அனைத்து வீரர்களும் ஸ்லெட்ஜிங்கை எதிர்கொண்டிருப்பார்கள். மேலும் இது யார் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்து அமைகிறது. அதேபோல் யாராக இருந்தாலும் எனது தாய் பற்றியோ, சகோதரி பற்றியோ பேசினால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.