ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால் Cricinfo
கிரிக்கெட்

"ஜெய்ஸ்வாலை பாராட்ட மாட்டேன்!" - உலகசாதனை படைத்த போதும் மறுத்த கேப்டன் ரோகித்! என்ன காரணம்?

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா பதிவுசெய்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். போட்டியில் 236 பந்துகளில் 14 பவுண்டரிகள், 12 சிக்ஸர்களுடன் 214 ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தியாவை 556 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார்.

அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள், ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்ச (22) சிக்சர்கள், ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக (12) சிக்சர்கள் மற்றும் முதல் மூன்று டெஸ்ட் சதங்களையும் 150+ ரன்களுக்கு மேல் கன்வெர்ட் செய்த முதல் இந்திய வீரர் என பல்வேறு சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

jaiswal

இந்நிலையில் உலகில் உள்ள பல்வேறு தரப்பினர் ஜெய்ஸ்வாலை புகழ்ந்துவரும் சூழலில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா புகழ்ந்து பேச மறுத்துள்ளார்.

ஜெய்ஸ்வால் குறித்து எதுவும் பேசவேண்டாம் என நினைக்கிறேன்!

3வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் ஜெய்ஸ்வாலின் இன்னிங்ஸ் குறித்து கேள்வி எழுப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்து பேசிய அவர், “நான் முன்பே ஜெய்ஸ்வால் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். எனக்கு தெரியும் எங்கள் டிரெஸ்ஸிங் ரூமிற்கு வெளியே உள்ள அனைவரும் அவரைப் பற்றி நிச்சயம் பேசுவார்கள். ஆனால் நான் அவரைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். அவரைப் பற்றி அதிகம் பேசதேவையில்லை, அவர் தன்னுடைய வாழ்க்கையை இப்போது தான் உயரகமாக தொடங்கியுள்ளார்” என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

rohit sharma

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் போதே ரோகித் சர்மா அவருக்கு ஆதரவாக நிறைய பேசியும் ஊக்கமும் அளித்துள்ளார். ஜெய்ஸ்வால் ரோகித் சர்மாவை மும்பை அணியின் கேப்டனாக இருந்தபோதே தன்னுடை குருவாகத்தான் பார்த்துள்ளார். அறிமுக போட்டியில் முதல் சதம் அடித்தபோதும் கூட அவர் ரோகித் சர்மாவிற்கு கிரிடிட் கொடுத்தார். அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு என்பது எப்போதும் குரு-சிஷ்யன் உறவாகவே இருந்துள்ளது.

sarfaraz - jaiswal

மூத்தவீரர்கள் இல்லாமல் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என்று கூறிய ரோகித், இளம் வீரர்களை பாராட்டினார். இதுகுறித்து பேசிய அவர், “முதல் போட்டியில் தோற்றபிறகு நாங்கள் மீண்டுவந்து தொடரை வெல்வது எளிதான ஒன்றாக இருக்காது என்பது எங்களுக்குத் தெரியும். குறிப்பாக எங்கள் முன்னணி வீரர்கள் பலர் இல்லாத போது, அடுத்த வெற்றியை பெற நாங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. எங்கள் அணியில் இரண்டு அறிமுக வீரர்களும், மற்ற வீரர்களிடம் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபம் கூட இல்லை. இருந்தபோதும் இளம்வீரர்கள் களத்தில் செய்து காட்டியது அபாரமானதாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து அதை செய்ய நினைக்கிறார்கள்” என்று பாராட்டி பேசினார்.