ind vs sa x page
கிரிக்கெட்

IND Vs SA T20 | தொடரைக் கைப்பற்றுமா இந்தியா.. கில் Out.. பும்ரா Entry.. மைதானம் எப்படி?

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

Prakash J

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை அவர்களின் சொந்தமண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் கம்பேக் கொடுத்த இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

ind vs sa

இந்நிலையில் 5 டி20 போட்டிகள் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது. லக்னோவில் நடைபெற இருந்த 4ஆவது போட்டி, கடுமையான பனி காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரைக் கைப்பற்றும். மாறாக, தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றால் தொடர் சமனாகும். வடமாநிலங்களில் நிலவும் பனி காரணமாக, இம்மைதானத்திலும் லேசான பனிக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக அவஸ்தைப்படும் ஷுப்மன் கில் களம் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர் களம் இறங்காவிட்டால், வேகப்பந்துவீச்சாளரைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் வருவார் எனத் தெரிகிறது.

ஷுப்மன் கில்

அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரை எந்தவித மாற்றங்கள் செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. மேலும் இந்த மைதானத்தைப் பொறுத்தவரை ஷுப்மன் கில் டி20 போட்டியில் சதமடித்துள்ளார். அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் 47 ரன்கள் எடுத்தால், விராட் கோலியின் 1,614 ரன்கள் சாதனையை முறியடிப்பார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு இந்திய பேட்டர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இது பதிவாகும். தென்னாப்பிரிக்கா அணி, ஜனவரி 2023 முதல் 13 இருதரப்பு தொடர்களில் விளையாடி வருகிறது. அதில் அவர்கள், ஒரே ஒரு தொடரை மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு அதன் சொந்த மண்ணில் வென்றிருந்தனர்