ind vs pak web
கிரிக்கெட்

இந்தியா vs பாகிஸ்தான்| பலம், பலவீனம்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?

2025 சாம்பியன்ஸ் டிராபியில் இன்று மிகப்பெரிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Rishan Vengai

2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் டாமினேட் செய்த பாகிஸ்தான் அணி, இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தட்டிச்சென்றது.

2017 சாம்பியன்ஸ் டிராபி

இறுதிப்போட்டியில் தோற்றதற்கு பழிதீர்க்கும் ஒரு போட்டியில் இன்று நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை, ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது.

வெற்றிவாய்ப்பு யாருக்கு?

இதுவரையிலான சாம்பியன்ஸ் டிராபி மோதலில் 5 முறை ஒருவரை ஒருவர் எதிர்கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளில், பாகிஸ்தான் 3-2 என முன்னிலை வகிக்கிறது. 2004-ல் கங்குலி தலைமையிலும், 2009-ல் தோனி தலைமையிலும், 2017-ல் கோலி தலைமையிலும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி.

இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவான அணியாக இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்களை பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சு மட்டுமே சிறிது பாதிக்கக்கூடிய விசயமாக இருக்கிறது.

ஆனால் பாகிஸ்தான் அணியில் ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளராக அப்ரார் அகமது மட்டுமே உள்ள நிலையில், அவரை சமாளித்து ஆடிவிட்டாலே இந்தியா நல்ல டோட்டலை எட்டிவிடும்.

ind vs pak

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை திறமையான வீரர்கள் இருந்தும், பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் ஃபார்மில் ஒரு வீரர்கள் கூட இல்லை. சமீபத்தில் கேப்டன் முகமது ரிஸ்வான் மட்டுமே பேட்டிங் ஃபார்மில் இருந்துவருகிறார். அவரும் நிலைத்துநின்று பின்னர் அடிக்க கூடியவர் என்பதால், அவரை விரைவாகவே வெளியேற்றிவிட்டால் இந்தியா வெற்றியை எளிதாக ருசித்துவிடும்.

பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சு டிரியோவான நஷீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் மூன்றுபேரும் துபாய் ஆடுகளத்தில் சிறப்பாக வீசக்கூடியவர்கள் என்பதால், அவர்கள் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இருக்கிறது.