ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 330 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
3 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் இன்றைய 4வது லீக் போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி.
2025 மகளிர் உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரதிகா மற்றும் ஸ்மிரிதி இருவரும் 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு வலுவான தொடக்கம் கொடுத்தனர்.
மந்தனா 80 ரன்களிலும், பிரதிகா 75 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற மிடில் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய ஹர்லீன் தியோல் 38, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33, ரிச்சா கோஷ் 32 மற்றும் ஹர்மன்ப்ரீத் 22 ரன்கள் அடிக்க 48.5 ஓவரில் 330 அரன்கள் அடித்த இந்திய அணி ஆல் அவுட்டானது. 294/4 என வலுவான நிலையில் இருந்த இந்திய அணி கடைசி 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
331 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடவிருக்கிறது.