இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா பும்ராவின் 5 விக்கெட்டுகள் பந்துவீச்சால் 159 ரன்னுக்கு சுருண்டது
தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 189 ரன்களுக்கு சுருண்டது.. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 39 ரன்கள் அடித்தார், தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் ஹார்மர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்..
ஹார்மருக்கு எதிராக 34.5 ஒவரில் பவுண்டரி விரட்டிய இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு கழுத்தில் பிடிப்பு ஏற்பட்டது.. அதிக வலி காரணமாக அவர் ரிட்டயர்டு அவுட் மூலம் வெளியேறினார்.. நடந்து சென்றபோது அவரால் கழுத்தை அசைக்க கூட முடியாத காட்சியை பார்க்க முடிந்தது..
சுப்மன் கில் உடற்தகுதி குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை.. தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவருகிறது..