நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நடப்பாண்டின், 23ஆவது காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழா 4ஆவது முறையாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், 72 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 தடகள வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 125 வீரர்கள் (77 ஆண்கள், 48 பெண்கள்) 13 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து பதக்க வேட்டைகளை இந்தியா குவித்து வரும் நிலையில், பெண்களுக்கான 63 கிலோ பளுதூக்குதல் எடைப் பிரிவில், இந்தியாவின் நிரூபமா தேவி சேரம் தோல்வியடைந்தார்.
அவர் ஸ்னாட்ச் பிரிவில்முதல் முயற்சியிலேயே 93 கிலோ எடையைத் தூக்கத் தவறினார். இரண்டாவது முயற்சியில் 93 கிலோ வெற்றிகரமாகத் தூக்கினார். அடுத்து, மூன்றாவது முயற்சியில் 95 கிலோ முயற்சித்தும் வெற்றிபெறவில்லை. இதனால் ஸ்னாட்ச் சுற்றின் முடிவில் 93 கிலோவுடன் 5-ஆவது இடத்தில் இருந்தார்.
தனது பதக்க வாய்ப்பை அதிகரிக்க உயர்ந்த எடையைத் தேர்வு செய்து களமிறங்கினார். இருப்பினும், மொத்த எடை அடிப்படையில் முதல் மூன்று இடங்களுக்குள் வர முடியாமல் போனதால் பதக்கம் நழுவியது. இதையடுத்து, 123 கிலோ எடைப் பிரிவில் தனது மூன்றாவது மற்றும் இறுதி கிளீன் அண்ட் ஜெர்க் முயற்சியில் தோல்வியடைந்து, பதக்கங்களைப் பெறத் தவறினார். இதன்மூலம் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிய முதல் இந்திய பளுதூக்கு வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
மேலும், பளுதூக்குதலில் இந்தியா தொடர்ச்சியாகப் பெற்றுவந்த ஆறு பதக்கங்களின் சாதனையும் முடிவுக்கு வந்தது. மணிப்பூரைச் சேர்ந்த இந்திய பளுதூக்குதல் வீராங்கனையான நிரூபமா தேவி சேரம், 2025 காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்தப் போட்டியிலும் அவர் பதக்கம் வெல்வார் எனக் கருதப்பட்டார். அந்த நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றாத்தை அளித்துள்ளது.