2024, 2026 டி20 உலகக்கோப்பைகளை கைப்பற்றி மூன்று ஆண்டுகள் நம்பர் 1 இடத்தை ஆட்சி செய்த இந்தியா, சூர்யகுமார் யாதவின் நீக்கத்திற்குப் பின் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் சரிவை சந்தித்தது. அயர்லாந்துக்கு எதிராக 0-2, இங்கிலாந்துக்கு எதிராக 0-4 என தொடரை இழந்து, பட்லரின் 131, ப்ரூக்கின் 90 ரன்கள் மிரட்டிய கடைசி போட்டியிலும் 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, தரவரிசையில் முதலிடத்தையும் இழந்தது.
2024, 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி 3 ஆண்டுகளை கடந்து டி20 தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 2026 டி20 உலகக்கோப்பை வென்ற கையோடு கோப்பை வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவை வெளியேற்றிய இந்திய நிர்வாகம், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியை உருவாக்கியது.
அயர்லாந்துக்கு எதிராக களம்கண்ட ஸ்ரேயாஸ் தலைமையிலான இந்தியா 0-2 என தொடரை இழந்து மோசமான சாதனை படைத்தது. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்தியா ஒரு வெற்றிகூட இல்லாமல் தொடரை இழந்ததுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 64 பந்தில் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் உட்பட 131 ரன்கள் குவித்து மிரட்டினார். கேப்டன் ஹாரி ப்ரூக்கும் 90 ரன்கள் விளாச 20 ஓவரில் 257 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.
258 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியால் 201 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. 56 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி ஒரு வெற்றி கூட இல்லாமல் நாடு திரும்ப உள்ளது. உலக சாம்பியனாக இங்கிலாந்துக்கு சென்ற இந்திய அணியால் ஒரு வெற்றியை கூட பெறமுடியாதது கடுமையாக விமர்சனத்தை பெற்றுத்தந்துள்ளது.
முதல் இந்திய கேப்டன்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் 7 போட்டிகளிலும் தோற்ற முதல் இந்திய கேப்டனாக மோசமான சாதனை படைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்தப்பட்டியலில் ஜிம்பாப்வே கேப்டன்கள் வரிசையில் இணைந்தார்.
முதல்முறையாக படுதோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி 0-4 என தொடரை இழந்தது. இதன்மூலம் ஒரு டி20 தொடரில் 4 போட்டிகளில் முதல்முறையாக தோற்று மோசமான சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
1,605 நாட்களுக்குப் பின் சரிவு
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-4 என தோற்ற இந்திய அணி 1,605 நாட்களுக்குப் பிறகு டி20 தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தை இழந்தது. இங்கிலாந்து அணி முதலிடத்தை பிடித்துள்ளது.