2025 ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது செப்டம்பர் 30-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதிவரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இலங்கையின் கொழும்புவுடன் சேர்த்து குவஹாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மற்றும் நவி மும்பை ஆகிய நான்கு இந்திய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று தொடங்கிய மகளிர் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நேற்று குவஹாத்தியில் தொடங்கிய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியில் மழை குறுக்கிட்டதால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தியோல் 48 ரன்கள், தீப்தி ஷர்மா 53 ரன்கள் மற்றும் அமஞ்சோத் கவுர் 57 ரன்கள் அடிக்க 269 ரன்கள் சேர்த்தது இந்தியா.
270 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை மகளிர் அணி 45.4 ஓவர்கள் முடிவில் 211 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. 59 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது இந்திய அணி. சிறப்பாக பந்துவீசிய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அக்டோபர் 5-ம் தேதி நடக்கவிருக்கும் அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.