#BREAKING | 319 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து
#BREAKING | 319 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து  pt web
கிரிக்கெட்

IND vs ENG | 319 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; விக்கெட் வேட்டை நடத்திய இந்தியா

Angeshwar G

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டியில் இங்கிலாந்து ஒரு வெற்றியும், இந்தியா வெற்றியும் பெற்றுள்ள நிலையில், தொடரானது 1-1 என சமநிலையில் இருந்துவருகிறது.

அஸ்வின், ஜடேஜா, ஜெய்ஸ்வால்

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜாவின் சதத்தால் 445 ரன்களை குவித்தது. தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஒரு பக்கம் சாக் கிராவ்லி நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் கிடைத்த பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு விரட்டிய பென் டக்கட் குறைவான பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். இந்த கூட்டணி 89 ரன்களுக்கு செல்ல, முதல் விக்கெட்டை தேடிய கேப்டன் ரோகித் சர்மா பந்தை அஸ்வின் கையில் கொடுத்தார்.

சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் நிலைத்து நின்று ஆடிய சாக் கிராவ்லியை 15 ரன்னில் வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார். சாக் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது விக்கெட்டை வீழ்த்தி ஜாம்பவான்களின் சாதனை பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்களை எடுத்திருந்தார். சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியில் சிராஜ் 4 விக்கெட்களையும், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடும் இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு, 57 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. ரோகித் சர்மா 19 ரன்களில் ரூட் பந்துவீச்சில், எல்.பி.டபிள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்திருந்தார்.