samson - gaikwad - ashwin bcci / ashwin
கிரிக்கெட்

2027 ODI உலகக்கோப்பை Squad-ஐ கணித்த அஸ்வின்.. 13 வீரர்கள் IN.. 9 பேர் OUT! எதிர்பாராத வீரர் தேர்வு!

ரவிச்சந்திரன் அஸ்வின் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான ஸ்குவாட் தேர்வு குறித்து தன்னுடைய பதிலை வெளிப்படுத்தியுள்ளார்.

Rishan Vengai

2027 ஒருநாள் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கவுள்ள நிலையில், இது ரோகித் சர்மா, விராட் கோலியின் கடைசி உலகக்கோப்பை என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிக்இன்ஃபோ பேட்டியில் அஸ்வின், கில், ரோகித், கோலி உள்ளிட்ட 13 பேரை தேர்வு செய்து, பல வீரர்களின் தேர்வை நீக்கினார்.

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையானது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் உள்ள பன்னிரண்டு மைதானங்களில் நடைபெறவிருக்கின்றது. 24 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஆப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் திரும்ப உள்ளது. இத்தொடருக்கான மைதானங்கள் மற்றும் லோகோவை ஐசிசி தற்போதே அறிவித்துள்ளது.

virat kohli - rohit sharma

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் இருபெரும் ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கடைசி உலகக்கோப்பையாக பார்க்கப்படுகிறது. இதனால் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கு முன்னதாக அணித்தேர்வு எப்படி இருக்க வேண்டும், யார் யார் ஸ்குவாடில் இடம்பெறுவார்கள் என்பதுபோலான கேள்வி ஒன்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்விடம் கேட்கப்பட்டுள்ளது. கிறிக்இன்ஃபோ உடனான உரையாடலில் அஸ்வின் தன்னுடைய வீரர்கள் தேர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

அஸ்வினின் 2027 ODI உலகக்கோப்பை Squad!

கிறிக்இன்ஃபோ வெளியிட்டிருக்கும் யூடியூப் வீடியோவில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி அடங்கிய 13 வீரர்கள் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் இடம்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

அதேபோல சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், சூர்யவன்ஷி, ஷிவம் துபே போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன் தொடக்க வீரர் என்பதால் அவருடைய இந்த முடிவை ரசிகர்கள் ஆதரித்துள்ளனர்.

இவர்களை தவிர வாய்ப்புள்ள வீரர்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அணியில் இருக்கும் 13 வீரர்கள் :

விராட் கோலி, ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, சுப்மன் கில், புவனேஷ்வர் குமார்

அணியில் இருக்க வாய்ப்பில்லாத 9 வீரர்கள் :

சஞ்சு சாம்சன்,சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிவம் துபே, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார்

வாய்ப்புள்ள வீரர்கள் :

ஜெய்ஸ்வால், கெய்க்வாட், வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, ஷமி, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா

அஸ்வினின் எதிர்பாராத தேர்வு..

அஸ்வின் பிக் செய்ததில் அனைவராலும் கவனிக்கப்பட கூடிய தேர்வாக புவனேஷ்வர் குமாரின் தேர்வு உள்ளது. கடைசியாக 2022ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாடியிருக்கும் புவனேஷ்வர் குமார், ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக 2 சீசன்களில் 42 விக்கெட்டுகளையும், ஒரே சீசனில் குறைவான எகானமியுடன் 28 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு கவனம் ஈர்த்துள்ளார். தன்னுடைய அனுபவம் மற்றும் லைன் லெந்தில் 36 வயதில் அசத்தும் புவனேஷ்வரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

புவனேஷ்வர் குமார்

புவனேஷ்வர் பற்றி பேசிய அஸ்வின், “புவனேஷ்வர் குமார் நிச்சயம் தேவை. நான் அவரிடம் இதுபற்றிப் பேசுவேன். அவரை முதல் தரப் போட்டிகள், விஜய் ஹசாரே போட்டிகள் என அனைத்திலும் விளையாட வைத்து, தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லும் முன் அவரைத் தனது உச்சபட்ச ஃபார்மில் வைத்திருக்க வேண்டும். அங்கு அவர் நமக்குத் தேவைப்படுவார் என்று நான் நினைக்கிறேன்” என கூறியுள்ளார். அஸ்வினின் இந்த தேர்வு ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது.