தோனி, ருதுராஜ்
தோனி, ருதுராஜ் ட்விட்டர்
கிரிக்கெட்

’தோனியின் ஸ்டைலை காப்பியடிக்க மாட்டேன்.. ஆனால்’ - கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் சொல்வது என்ன?

Prakash J

19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகின்றன. கடந்த செப். 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிரிக்கெட்டும் இடம்பெற்றது. முன்னதாக இதன் மகளிர் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது.

indian womens team

இந்த நிலையில் இந்திய ஆடவர் அணி, நாளை (அக். 3) நேரிடையாக காலிறுதிப் போட்டியில் களம் காண இருக்கிறது. இந்திய அணி, நேபாளம் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்காக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரில் கேப்டனாகப் பொறுப்பேற்றிருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்காக தங்கம் வெல்வதுதான் எங்களுடைய கனவாக இருக்கிறது. என்னைப் பொறுத்தைவரை இந்த கேப்டன்ஷிப்பில் தோனியைக் காப்பியடிக்காமல் என் ஸ்டைலைப் பின்பற்றுவேன். தோனியின் கேப்டன் ஸ்டைலும், செயல்பாடும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதேபோல் என்னுடைய செயல்பாடும் மிகவும் வித்தியாசமானது.

இதனால் தோனியைப்போல் காப்பி அடிக்காமல் என்னுடைய ஸ்டைலைப் பின்பற்றுவேன். தோனி இந்த தருணத்தில் என்ன செய்வார் என்பது குறித்து யோசிக்கமாட்டேன். அதேசமயம் நெருக்கடியான சமயத்தில் தோனி எந்த விஷயங்களை செய்வார் என்பது குறித்து யோசித்து அதை நாம் பின்பற்றுவதில் தவறில்லை. குறிப்பாக நெருக்கடியான சூழ்நிலையில் அவர் எப்படி செயல்படுவார்? குறிப்பிட்ட வீரரை அவர் எவ்வாறு போட்டியிடும்போது கையாள்வார் என்பது குறித்து நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். எனினும் என் மனதிற்கு எப்படி தோன்றுகிறதோ அதைப்போல ஒரு கேப்டனாக இருந்து செயல்படுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.