வங்கதேச வீரரான சபீர் ரஹ்மான் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறார்.
2016 ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 54 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அசத்தினார். அதில் 10 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
2024 டி20 உலக கோப்பை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, பட்டியலில் 83 ரன்களுடன் 4வது இடத்தில் நீடிக்கிறார்.
2016 ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 55 பந்துகளில் 83 ரன்கள் அடித்தார். அதில் 7 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
ஆப்கானிஸ்தானின் அதிரடி தொடக்க வீரரான ரஹமனுல்லா குர்பாஸ் இலங்கைக்கு எதிரான 2022 ஆசியக்கோப்பை போட்டியில் 45 பந்தில் 84 ரன்கள் அடித்து விளாசினார். இதில் 6 சிக்சர்களும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்தியாவின் ரன் மெஷின் பேட்ஸ்மேனான விராட் கோலி ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் சதமடித்த ஒரே இந்திய வீரராக நீடிக்கிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2022 ஆசியக்கோப்பை டி20 போட்டியில் சதமடித்த விராட் கோலி, தன்னுடைய முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவுசெய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 61 பந்தில் 12 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உட்பட 122* ரன்கள் குவித்து அசத்தினார்.
பாபர் ஹயாத் (ஹாங்காங்)
ஹாங்காங்கை சேர்ந்த அதிரடி வீரரான பாபர் ஹயாத், ஆசியக்கோப்பை டி20 வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
2016 ஆசியக்கோப்பை தொடரில் ஓமன் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் 60 பந்தில் 122 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும்.