இந்தியா கிரிக்கெட் அணி web
கிரிக்கெட்

IND vs SA | இந்தியாவிற்கு மேலும் பின்னடைவு.. ODI தொடரை தவறவிடும் 2 முக்கிய வீரர்கள்!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நவம்பர் 30 முதல் நடைபெறவிருக்கிறது..

Rishan Vengai

தென்னாப்ரிக்காஇந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது..

இந்தியா - தென்னாப்பிரிக்கா

டெஸ்ட் தொடர் தொடங்கப்பட்ட நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது தென்னாப்ரிக்கா.. வெறும் 124 ரன்களை அடிக்கமுடியாமல் சொந்தமண்ணில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது..

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் குவஹாத்தியில் நடக்கவிருக்கிறது..

ODI தொடரை தவறவிடும் 2 இந்திய வீரர்கள்..

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் நவம்பர் 30, டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 6-ம் தேதிகளில் நடக்கவிருக்கின்றன..

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்தில் காயம் ஏற்பட்ட சுப்மன் கில் ஒருநாள் போடிக்கு திரும்பிவருவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

சுப்மன் கில்

அதேபோல ஆசியக்கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டு வெளியேறிய ஹர்திக் பாண்டியா ஒருநாள் தொடருக்கு அணிக்கு திரும்ப மாட்டார் என்றும், அவர் நேராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பார் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.. 2026 டி20 உலகக்கோப்பைக்கு தயார் ஆவதற்காக ஹர்திக் பாண்டியா மீது ரிஸ்க் எடுக்காமல் டி20 தொடரில் பங்கேற்குமாரு பிசிசிஐ அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது..

hardik pandya

சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா இடம்பெறாதது இந்தியாவிற்கு பின்னடைவை தந்தாலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற மூத்தவீரர்கள் மீதி எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது..