sanju samson - gambhir  X Page
கிரிக்கெட்

CT2025 | சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு.. காம்பீரின் பழைய வீடியோ வைரல்!

சாம்பியன்ஸ் டிராபியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதபோதும், அவருக்கு கவுதம் காம்பீர் ஆதரவு அளித்த பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்தது குறித்து பிசிசிஐக்குள்ளேயே மோதல் வெடித்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், சஞ்சு சாம்சனை கம்பீர் தேர்வு செய்ததாகவும், ஆனால், அவருக்குப் பதில் ரிஷப்பை கேப்டனும் ரோகித்தும் தேர்வுக் குழுத் தலைவர் அகார்கரும் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிசிசிஐக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், சஞ்சு சாம்சனுக்கு கவுதம் காம்பீர் ஆதரவு அளித்த பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

காம்பீர், சஞ்சு சாம்சனை பாராட்டியிருக்கும் அந்த பழைய வீடியோவில், ”சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், அது சஞ்சு சாம்சனுக்கு இழப்பு அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில், அது இந்திய அணிக்குத்தான் இழப்பு. ரோகித், கோலிக்கு ஆதரவு அளிப்பதைப்போல சஞ்சு சாம்சனுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளதைத் தொடர்ந்து அவருக்கு காம்பீர் ஆதரவளித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.