alexander zverev x page/Omar HQ
கிரிக்கெட்

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்வெரே.. 30 ஆண்டுக்குப் பின் ஜெர்மனி வீரர் சாதனை!

நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் ஸ்வெரேவ் தனது டென்னிஸ் வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். பட்டம் வென்றுள்ள ஸ்வெரேவுக்கு 31 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

Prakash J

பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் பிளாவியோகோபோலியை வீழ்த்தி ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் பிளாவியோகோபோலியை வீழ்த்தி ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜெர்மன் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். போட்டியின் முதல் செட்டை ஸ்வெரேவ் எளிதாகக் கைப்பற்றினார். அதன்பின் மீண்டெழுந்த கோபோலி, இரண்டாவது செட்டை வென்று சமநிலை ஏற்படுத்தினார். மூன்றாவது செட்டில் கோபோலியின் தவறை பயன்படுத்திய ஸ்வெரேவ் மீண்டும் முன்னிலை பெற்றார்.

alexander zverev

நான்காவது செட்டில் கோபோலி கடுமையாகப் போராடி டைபிரேக்கர் மூலம் வெற்றி பெற்று போட்டியை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டுக்கு கொண்டுசென்றார். எனினும், இறுதி செட்டில் அனுபவத்தை வெளிப்படுத்திய ஸ்வெரேவ் ஆதிக்கம் செலுத்தி வெற்றியை உறுதி செய்தார். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் ஸ்வெரேவ் தனது டென்னிஸ் வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். பட்டம் வென்றுள்ள ஸ்வெரேவுக்கு 31 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.