கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் அடிக்கும் சிக்ஸர், நூறு மீட்டர் உயரத்துக்கு மேல் சென்றால், அதற்கு ஆறு ரன்களுக்கு பதிலாக 12 ரன்கள் கொடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளதற்கு எதிரிவினை கிளம்பியுள்ளது. இதுகுறித்த செய்தியை இங்கு பார்க்கலாம்,
கிரிக்கெட்டில் ஒரு பேட்டர் அடிக்கும் சிக்ஸர், நூறு மீட்டர் உயரத்துக்கு மேல் சென்றால், அதற்கு ஆறு ரன்களுக்கு பதிலாக 12 ரன்கள் கொடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். இவ்வாறு செய்தால் நிறைய பேட்டர்கள் அதிக உயரத்தில் ஷாட்களை அடிப்பார்கள் இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டில் சுவாரசியம் அதிகரிக்கும் என்றும் சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ரசிகர் ஒருவர், பந்துவீச்சாளர் நடு ஸ்டம்பை கீழே விழச் செய்தால் அந்தப் பந்தை எதிர்கொண்ட பேட்டர் மட்டுமல்லாமல் அவருக்கு அடுத்த பேட்டரும் அவுட்டானதாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் நிறைய பந்துவீச்சாளர்கள் துல்லியமான யார்க்கர்களை வீசுவார்கள் அதன் மூலம் கிரிக்கெட்டில் சுவாரசியம் அதிகரிக்கும் என்றும் ரசிகர் எதிர்வினையாற்றி இருக்கிறார்.