இங்கிலாந்து - ஆஸ்திரேலியா web
கிரிக்கெட்

2025 ஆஷஸ் தொடர்| பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

2025-2026 ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட்.

Rishan Vengai

உலகின் புகழ்பெற்ற டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் வரும் 2025 நவம்பர் 21 முதல் ஜனவரி 8-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கின்றது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

2010-க்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வெல்லாத இங்கிலாந்து அணி, இந்தமுறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வெல்லவேண்டும் என்ற முயற்சியில் 2025 ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட வலுவான அணி..

1877 முதல் நடைபெற்றுவரும் பழையான ஆஷஸ் டெஸ்ட் தொடர் 73 தொடர்களை கண்டுள்ளது. இதில் 34 முறை ஆஸ்திரேலியா அணியும், 32 முறை இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன.

2021 ஆஷஸ் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணி, 2023 ஆஷஸை சமன்செய்து தற்போது கோப்பையை தங்கள் வசம் வைத்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இங்கிலாந்து அணி 2010-க்கு பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை வெல்லும் முயற்சியில் களம்காணவிருக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயிப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக் (துணை கேப்டன்), பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், மார்க் வுட்