77 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்த இங்கிலாந்து x
கிரிக்கெட்

77 ஆண்டுகளில் முதல்முறை.. இந்தியாவிற்கு எதிராக வரலாறு படைத்த இங்கிலாந்து வீரர்கள்!

77 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவிற்கு எதிராக சாதனை படைத்துள்ளனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்.

Rishan Vengai

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் சேர்த்தது.

அதற்குபிறகு விளையாடிவரும் இங்கிலாந்து அணி 544/7 என்ற வலுவான நிலையில் 186 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடிவருகிறது.

இந்தியா - இங்கிலாந்து

ஏற்கனவே 2-1 என தொடரில் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி, இப்போட்டியில வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடிவருகிறது.

77 ஆண்டுகளில் முதல்முறை..

இந்தியாவிற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 4 பேரும் 70 ரன்களுககு மேல் அடித்து அசத்தினர். ஜோ ரூட் 150 ரன்கள் அடித்த நிலையில், பென் டக்கெட் 94 ரன்களும், ஜாக் கிராவ்லி 84 ரன்களும, ஒல்லி போப் 71 ரன்களும் அடித்து அசத்தினர்.

இப்படி இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் 4 பேரும் 70 ரன்களுக்கு மேல் அடிப்பது 77 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. ஒரு வரலாற்று சாதனை படைத்திருக்கும் இங்கிலாந்து அணி, 4வது டெஸ்ட் போட்டியிலும வென்று 3-1 என தொடரை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.