இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து, ஐசிசி டி20 தரவரிசையில் 269 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை கைப்பற்றியது. 2022 முதல் 1600 நாட்களுக்கும் மேலாக டி20 தரவரிசையில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவை, குறைவான போட்டிகளில் சம புள்ளி எடுத்த இங்கிலாந்து பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்தியா விரைவில் மீண்டும் முதலிடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என ஒயிட்வாஷ் செய்தபிறகு, ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தது இங்கிலாந்து அணி. 3 போட்டிகளிலும் இலங்கை அணியை டாமினேட் செய்த இங்கிலாந்து அணி 269 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
2022 முதல் 2026 உலகக்கோப்பை வரை டி20 வடிவத்தில் ஆதிகம் செலுத்திய இந்தியா 1600 நாட்களுக்கும் மேலாக டி20 தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருந்தது. அதற்குபிறகு ஸ்ரேயாஸ் தலைமையில் சில தொடர்களை இழந்த இந்தியா, பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்து முதலிடம் பிடித்தது.
இந்தசூழலில் தற்போது இங்கிலாந்து இந்தியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. இரண்டு அணிகளும் ஒரே புள்ளியில் இருந்தாலும் இங்கிலாந்து குறைவான போட்டிகளில் அதை பெற்றுள்ளதால் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா விரைவில் அவர்கள் விட்ட இடத்தை பிடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது ஒருநாள் தரவரிசையில் இந்தியாவும், டி20 தரவரிசையில் இங்கிலாந்தும், டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளன.