sarfaraz khan  x page
கிரிக்கெட்

மீண்டும் மீண்டும் ஜொலிக்கும் சர்ஃபராஸ் கான்.. தேர்வுக் குழுவைச் சாடிய Ex வீரர்!

இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் திரும்பிப் பார்க்காவிட்டாலும், அணியில் தேர்வு செய்யாவிட்டாலும்கூட, தனக்குத் தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டுமே என தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார் சர்ஃபராஸ் கான்.

Prakash J

இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் திரும்பிப் பார்க்காவிட்டாலும், அணியில் தேர்வு செய்யாவிட்டாலும்கூட, தனக்குத் தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டுமே என தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார் சர்ஃபராஸ் கான்.

இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் திரும்பிப் பார்க்காவிட்டாலும், அணியில் தேர்வு செய்யாவிட்டாலும்கூட, தனக்குத் தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டுமே என தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார் சர்ஃபராஸ் கான். இதற்காக உடல் எடையைக் குறைத்திருப்பதும் இன்னொரு வியப்பான விஷயம். ஆம், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வரும் அவர், உத்தரகாண்ட் அணிக்காக 55 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், நேற்றையப் போட்டியில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் 75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும் 14 சிக்ஸர்களும் அடக்கம். அவரின் இந்த ரன்னால், மும்பை அணி 444 ரன்கள் குவிக்கவும் உதவினார். இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் கோவா அணி, 357 ரன்கள் எடுத்த நிலையில், 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

sarfaraz khan

இந்த வெற்றிக்கு சர்ப்ராஸ் கானின் பங்கும் ஒரு காரணம். இதையடுத்து, சர்ப்ராஸ் கானின் பெயர் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது. 2000களின் பிற்பகுதியில் சீனியர் ஆண்கள் தேர்வுக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய முன்னாள் இந்திய கேப்டன் திலீப் வெங்சர்க்கார், சர்ஃபராஸை புறக்கணித்ததற்காக தற்போதைய தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர், “விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாட போதுமான நல்ல வீரர் சர்ஃபராஸ் கான். அத்தகைய திறமை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அவமானம்” எனச் சாடியுள்ளார்.

முன்னதாக, சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யாதது குறித்து இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கர், “சில நேரங்களில், சரியான முடிவுகளை எடுப்பது மிக முக்கியம். உதாரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சர்ஃபராஸ் சதம் அடித்தார், ஆனால். அவரது ஃபார்மைத் தொடர முடியவில்லை. அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய தேர்வுகள் இவை” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அஜித் அகார்கருக்கும் சர்ஃபராஸ் கானுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

sarfaraz khan

அந்தச் சமயத்தில் பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “இது மிகவும் கடினமான முடிவு; ஆனால், இதுதான் கிரிக்கெட். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது உங்களது இடத்தை இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு சதம் அடித்தாலும், அடுத்த இன்னிங்ஸில் அந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது. முந்தைய இன்னிங்ஸில் சதம் அடித்தோம் என நினைத்து இருக்கக் கூடாது. உங்கள் பார்வை எப்போதும் ஆட்டத்தின் மீதே இருக்க வேண்டும்; மேலும் ரன்களைக் குவிக்க வேண்டும் என நினைக்க வேண்டும். மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து, உங்களை நீங்களே அணியிலிருந்து வெளியே தள்ளிக்கொள்ளக் கூடாது. அணியில் உங்கள் வாய்ப்பைத் தக்க வைப்பது என்பது முற்றிலும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து கதவைத் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்; கதவுகளை உடைத்து எறிய வேண்டும். நீங்கள் அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக உங்களை மாற்ற வேண்டும்”என அறிவுரை வழங்கி இருந்தார். அதைக் காதில் வாங்கிக் கொண்ட சர்ஃபராஸ் கான் தனது திறமையைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ரவிச்சந்திரன் அஸ்வினும் அவரது திறமையைச் சுட்டிக்காட்டி, சிஎஸ்கே விளையாடும் லெவன் அணியில் அவரை ஒரு இம்பேக்ட் பிளேயராக சேர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் 2026இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் சர்ஃபராஸ் கான், கடந்த 2024இல் இந்தியாவுக்காக ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதில், 37.10 சராசரியுடன் 371 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் அடங்கும். ஆனால் அதையும் மீறி 2025இல் இந்தியா விளையாடிய மூன்று டெஸ்ட் தொடர்களில் எதற்கும் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.