இணையத்தில் வைரலாகும் தோனி - சாக்‌ஷி கியூட் வீடியோ web
கிரிக்கெட்

“அது அவுட் இல்ல.. அமைதியா இரு” - வைரலாகும் தோனி & சாக்ஷி கியூட் வீடியோ!

நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இந்தப்போட்டியின் போது அவுட் என நினைத்து துள்ளிக்குதித்த தோனியின் மனைவி சாக்‌ஷி வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Rishan Vengai

இந்திய-இங்கிலாந்து போட்டியில் பரபரப்பான தருணத்தில் தோனியின் மனைவி சாக்ஷி, பும்ரா பிடித்த ஒன் பிட்ச் கேட்ச்சை அவுட் என நினைத்து செலப்ரேட் செய்தார். ஆனால் தோனி அமைதியாக இருக்கும்படி கூறினார். இந்த கியூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. 

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் 89 ரன்கள் அதிரடி ஆட்டத்தால் 253 ரன்கள் குவித்தது.

பும்ரா

254 ரன்கள் என்ற இமாலய இலக்கு என்றபோதும் இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணியின் இளம்வீரர் பெத்தெல் 48 பந்தில் 105 ரன்கள் அடித்து மிரட்டினார். கடைசி போராடிய இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

வைரலாகும் தோனி & சாக்‌ஷி க்யூட் வீடியோ..

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி கடைசிஓவர் வரை வெற்றியின் பக்கத்திலேயே இருந்தது. அப்போது இந்திய பவுலர்களின் ஒவ்வொரு பந்துவீச்சும் முக்கியத்துவம் பெற்றது.

இந்தசூழலில் 18வது ஓவரில் பும்ரா வீசியபோது சாம் கரன் அடித்த பந்து பிட்சாகிவந்த நிலையில் பும்ரா அதை கேட்ச் பிடித்தார். அதை அவுட் என நினைத்த தோனியின் மனைவி சாக்‌ஷி துள்ளிக்குதித்து செலப்ரேட் செய்ய, அவரின் பின்னால் இருந்த தோனி அது அவுட் இல்ல அமைதியா இரு என விளக்கினார். சாக்‌ஷியின் செலப்ரேசனால் சுத்தி இருப்பவர்கள் அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். இந்தவீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.