பிசிசிஐ செயலாளராக தேவ்ஜித் சைக்கியா தேர்வு web
கிரிக்கெட்

BCCI-ன் புதிய செயலாளராக தேவ்ஜித் சைக்கியா தேர்வு! புதிய பொருளாளர் நியமனம்!

பிசிசிஐ செயலாளராக தேவ்ஜித் சைக்கியா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

Rishan Vengai

மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், பிசிசிஐ செயலாளராக தேவ்ஜித் சைக்கியாவும், பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

பிசிசிஐ செயலாளராக தேவ்ஜித் சைக்கியா..

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, ஐசிசி தலைவராக பதவியேற்றதை தொடர்ந்து, அப்பதவி காலியானது. அதேபோல், பொருளாளர் பதவியில் இருந்த ஆஷிஷ் ஷெலார் மகாராஷ்டிரா அரசில் அங்கம் வகிப்பதால் ராஜினாமா செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து இரு பதவிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் துணை செயலாளரான தேவ்ஜித் சைக்கியா மற்றும் பிரப்தேஜ் சிங் பாட்டியா மட்டுமே விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.