Jemimah Rodrigues x page
கிரிக்கெட்

WPL 2026 | டெல்லி அணியின் கேப்டனாகும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்? இன்று அறிவிப்பு!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட இருப்பதாகவும், அதுகுறித்த தகவல் இன்று வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Prakash J

தின்போதுடெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட இருப்பதாகவும், அதுகுறித்த தகவல் இன்று வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஐபிஎல்லில், மகளிர் போட்டிகளும் WPL என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு 4ஆவது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரிமீயர் லீக்கில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியை வழிநடத்திய மெக் லானிங் உ.பி. வாரியர்ஸ் அணியில் இணைந்துள்ளதால், இத்தகைய மாற்றம் செய்யப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Jemimah Rodrigues

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வர்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்திருந்தாலும், அந்த அணி ஓர் இந்தியரையே கேப்டனாக்க விரும்புகிறது. அந்த வகையில், ஜெமிமாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது பேசிய DC இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், "நாங்கள் ஓர் இந்தியரை கேப்டனாக்க விரும்புகிறோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

Jemimah Rodrigues

டெல்லி அணியின் ஓர் அடையாளமாக விளங்கும் ஜெமிமா ரோட்ரிக்ஸ், 2023ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் ஏலத்தில் அந்த அணி ஏலம் எடுத்த முதல் வீராங்கனை இவர்தான். மேலும் அடுத்த சுழற்சியில் டெல்லி தக்கவைத்த ஐந்து வீரர்களில் முதன்மையானவரும் ஜெமிமாதான். டெல்லி அணியில், கடந்த 3 சீசன்களாக விளையாடிவரும் ஜெமிமா, 27 போட்டிகளில் 507 ரன்கள் எடுத்துள்ளார். உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல அவர் முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்திருந்தார்.