csk vs mi web
கிரிக்கெட்

வென்றே ஆகவேண்டிய போட்டியில் CSK-MI மோதல்.. தோற்கும் அணி வெளியேறும் நிலைக்கு செல்லும்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் MUST WIN போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் முக்கிய கட்டத்தை எட்டிய நிலையில், 8 போட்டிகளில் 3 வெற்றியுடன் இருக்கும் சிஎஸ்கேவும், 2 வெற்றியுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸும் இன்று சேப்பாக்கில் மோதுகின்றன. வான்கடேவில் மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே, இன்றும் வென்றால் பிளே ஆஃப் நம்பிக்கையை பலப்படுத்தும்; தோல்வியடைந்த அணி தொடரிலிருந்து வெளியேறும் விளிம்புக்கு தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.

2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. 40 போட்டிகளை கடந்துள்ள நிலையில், டாப் 4 இடத்திற்காக ஒவ்வொரு அணியும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. அந்தவகையில் 8 போட்டியில் 3 வெற்றியுடன் இருக்கும் சிஎஸ்கேவும், 8 போட்டியில் 2 வெற்றியுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸும் வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் களமிறங்குகிறது.

MI, 2026

மும்பை வான்கடேவில் வைத்து மும்பையை சிஎஸ்கே வீழ்த்திய நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு அணிகளும் மோதவிருக்கின்றன. இந்தப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பும், தோற்கும் அணிக்கு வெளியேறும் வாய்ப்பும் உள்ளதால் போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தோற்றால் என்ன நடக்கும்..?

மும்பை இந்தியன்ஸ்

பிளே ஆஃப் செல்லவேண்டுமானால் ஒரு அணிக்கு 8 வெற்றிகள் தேவைப்படும் நிலையில், 2 வெற்றிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி மீதமிருக்கும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியில் மும்பை தோற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு செல்லும்.

சிஎஸ்கே, 2026

சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டியில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. மீதமிருக்கும் 6 போட்டிகளில் 5-ல் வென்றால் அந்த அணியால் பிளே ஆஃப் செல்லமுடியும். இன்றைய போட்டியில் மும்பை அணியை வெல்லாவிட்டால், அதற்கடுத்த போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ், எஸ்ஆர்ஹெச் அணிகளை எதிர்த்து விளையாட உள்ளதால் அவர்களுக்கு அங்கு ஒரு தோல்வி கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர்கள் கட்டாயம் வெற்றிபெறவேண்டும்.