ராகுல் சாஹர், இஷானி எக்ஸ் தளம்
கிரிக்கெட்

”கடைசி 15 மாதம் கடினம்” - மனைவியை விவாகரத்து செய்த CSK வீரர்.. ராகுல் சஹார் யார்?

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ராகுல் சஹார் தனது மனைவி இஷானியை விவாகரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Prakash J

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ராகுல் சஹார் தனது மனைவி இஷானியை விவாகரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக, 6 டி20 போட்டிகளிலும் 1 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ள ராகுல் சஹார், ஐபிஎல்லில் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகளுக்காக 79 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாட, கடந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப் பிலபங்கள் விவாகரத்து செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்னொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது மனைவியை விவாகரத்து செய்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ராகுல் சஹார் தனது மனைவி இஷானியை விவாகரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மார்ச் 9, 2022 அன்று கோவாவில் ராகுல் சஹார் இஷானியைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 22. இந்த நிலையில் ராகுல் சாஹர், தனது மனைவி இஷானியிடமிருந்து பிரிந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ”நான் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டேன். என்னைப் பற்றியோ, எனது தகுதி குறித்தோ அல்லது எனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியோ முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே இது நடந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகள் நான் சற்றும் எதிர்பாராத பல பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தன. கடந்த 15 மாதங்களாக நீதிமன்றங்களில் அலைந்தது எனக்குப் பொறுமையையும், மன உறுதியையும் கற்றுக் கொடுத்துள்ளது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்று எனது வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை. மிகவும் தெளிவாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், ”சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதில்லை. அவை நம்மை விழிப்படையச் செய்யவும், சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கவுமே வருகின்றன. இது ஒரு முடிவு அல்ல. இது ஒரு புதிய தொடக்கம். இனி நான் எடுக்கும் முடிவுகள் எனது சுயமரியாதை மற்றும் அமைதியைச் சார்ந்தே இருக்கும். எந்தவொரு கசப்பான உணர்வுகளையும் நான் சுமந்து செல்லவில்லை. பாடங்களையும், கண்ணியத்தையும், மீண்டும் தொடங்குவதற்கான தைரியத்தையும் மட்டுமே எடுத்துச் செல்கிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக, 6 டி20 போட்டிகளிலும் 1 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ள ராகுல் சஹார், ஐபிஎல்லில் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகிய அணிகளுக்காக 79 போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாட, கடந்த ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் உறவினரான ராகுல் சஹார், இஷானியை காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.