Sameer Rizvi
Sameer Rizvi web
கிரிக்கெட்

8.4 கோடிக்கு CSK அள்ளிய 20 வயது உள்நாட்டு வீரர்! யார் இந்த சமீர் ரிஸ்வி? அடுத்த ஃபினிசர் தோனி!

Rishan Vengai

அதிகப்படியான பணத்தை இறைக்கும் தொடர் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அதிகப்படியான இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதில் ஐபிஎல் தொடரானது தொடர்ந்து பெரிய பங்காற்றிவருகிறது. அந்தவகையில் 2024 ஐபிஎல் தொடரிலும் சமீர் ரிஸ்வியை அடையாளம் கண்டுள்ளது ஐபிஎல் தொடர்.

அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு சென்ற அவருடைய ஏலம், யாரும் எதிர்ப்பார்க்காத 8.4 கோடிக்கு சென்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இளம் டேலண்டான சமீர் ரிஸ்விக்கு போட்டிப்போட்ட நிலையில், 8.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டிச்சென்றுள்ளது. இந்த 20 வயது வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு மாற்றுவீரராகவும், தோனியை போன்ற சிறந்த வீரராகவும் பார்க்கப்படுகிறார்.

யார் இந்த சமீர் ரிஸ்வி? அடுத்த சுரேஷ் ரெய்னாவாக வருவாரா?

20 வயது உத்திரபிரதேச வீரர் தான் சமீர் ரிஸ்வி. சமீபத்தில் நடைபெற்ற அனைத்துவிதமான உள்நாட்டு தொடர்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் சமீர் ரிஸ்வி. மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கும் சமீர் ரிஸ்வி, சுரேஷ் ரெய்னாவை போன்றே நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடக்கூடியவர்களில் ஒருவர். நடந்துமுடிந்த உத்திரபிரதேஷ டி20 லீக் மற்றும் சயத் முஸ்டாக் அலி டிரோபி தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இவரை சிஎஸ்கே அணி தட்டித்தூக்கியுள்ளது. எப்படி ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஃபைண்டிங்க் சிஎஸ்கே வீரராக மாறினாரோ அப்படியே சமீர் ரிஸ்வியும் மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Sameer Rizvi

சமீபத்தில் நடைபெற்ற உத்திரபிரதேச T20 லீக்கில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக ஒன்பது இன்னிங்ஸ்களில் விளையாடிய ரிஸ்வி, இரண்டு சதங்கள் உட்பட 455 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல் சையத் முஷ்டாக் அலி டிராபியில் தனது சிக்ஸ் ஹிட்டிங் திறனைப் வெளிப்படுத்திய ரிஸ்வி, 18 சிக்சர்களை பறக்கவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதாவது அவர் சந்தித்த 11வது பந்தில் சிக்சரை பறக்கவிட்டிருந்தார் சமீர் ரிஸ்வி.

Sameer Rizvi

ரிஸ்வி இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடி 49.16 சராசரியில் 295 ரன்கள் எடுத்துள்ளார். 20 வயது வலது கை பேட்டரான இவர், ஆண்களுக்கான 23 வயதுக்குட்பட்ட மாநில A தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அங்கு அவர் இரு சதங்கள் உட்பட இரண்டு சதங்களையும் அடித்திருந்தார். இறுதிப்போட்டிவரை முன்னேறிய உத்தரபிரதேச அணியை, பைனலில் 50 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து உத்தரபிரதேசத்தை கோப்பைக்கு அழைத்து சென்றார். இந்த தொடரில் 37 சிக்சர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும் மாறினார் சமீர் ரிஸ்வி.

சிஎஸ்கே அணி அடுத்த 3 ஐபிஎல் தொடருக்கான இளம் அணியை கட்டமைக்கும் முனைப்பில் சிறந்த வீரர்களை பக்கெட்டில் போட்டுள்ளது.