viv richards
viv richards IPB
கிரிக்கெட்

கிழக்கு கரீபியன் ரூபாய் நோட்டில் இடம்பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் VIV Richards! வைரலாகும் புகைப்படம்

Rishan Vengai

’கதறவிட்டார்’ என்றால் அந்த வரிசையில் எழுதப்படும் முதல் பெயர் விவியன் ரிச்சர்ட்ஸ் என்ற பெயராகத்தான் இருக்கும். எக்காலத்திற்கும் சிறந்த வீரராக பாவிக்கப்படும் வீரர்களில் முதல் வீரராக கருதப்படுபவர் வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ். அவரை கௌரவிக்கும் விதமாக கிழக்கு கரீபியன் மத்திய வங்கியானது, ரிச்சர்ட்ஸ் புகைப்படம் அடங்கிய சிறப்பு $2 ரூபாய் நோட்டை வெளியிட்டு பெருமை படுத்தியுள்ளது.

ரிச்சர்ட்ஸின் பிறந்த இடமான ஆன்டிகுவாவில், கிழக்கு கரீபியன் மத்திய வங்கியின் 40 ஆண்டு நிறைவை கொண்டாடும் விழாவில் இந்த நினைவு நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரிச்சர்ட்ஸின் புகைப்படம் அடங்கிய சிறப்பு $2 ரூபாய் நோட்டு விவியன் ரிச்சர்ட்ஸிடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நோட்டு டிசம்பர் 6-ம் தேதி முதல் கிழக்கு கரீபியன் நாடுகளில் உள்ள வங்கிகளில் புழக்கத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

கனவுகள் இதிலிருந்து தான் உருவாக்கப்படுகின்றன!- விவ் ரிச்சர்ட்ஸ் நெகிழ்ச்சி

விவியன் ரிச்சர்ட்ஸின் புகைப்படம் அடங்கிய ரூபாய் நோட்டு முதன்முதலில் அவருக்கே வழங்கப்பட்டது. நாட்டின் ரூபாய் நோட்டில் இடம்பெற்றிருப்பது பற்றி நெகிழ்ந்து பேசியிருக்கும் ரிச்சர்ட்ஸ், " இப்படி கௌரவிக்கப்படுவது என்பது கனவுகளால் உருவாக்கப்பட்ட ஒன்று” என பேசியிருப்பதாக islandpressbox.com மேற்கோள் காட்டியுள்ளது.

viv richards

கிரிக்கெட் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் குறித்து பேசியிருக்கும் ECCB நாணய கவுன்சிலின் தலைவர் ஆமிலோ கோன்சால்வ்ஸ், “ தற்காலத்தில் நிறவெறி புதுப்புது வடிவங்களில், புதிய இடங்களில் தலை தூக்குகிறது, இனப்படுகொலையாக மாறுகிறது. ஆனால் எங்கள் விளையாட்டு வீரர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். ஆனால் சார் விவ் ரிச்சர்ட்ஸ் எப்போதும் அமைதியாக இருந்ததில்லை. தற்காலத்தில் பணத்தை பெரிதாக மதிக்கும் நிறைய கிரிக்கெட் வீரர்களை பார்க்கிறோம். ​வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஒற்றுமையை மறந்து பணத்தை பெரிதாக நினைக்கும் கிரிக்கெட் வீரர்கள், ஒருபோதும் சார் விவ் தற்போது பெற்றுக்கொண்ட பணத்தை போன்று பெறும் தகுதியை அடையவே மாட்டார்கள்” என பேசியுள்ளார். இந்நிலையில் விவியன் ரிச்சர்ட்ஸ் புகைப்படம் அடங்கிய ரூபாய் நோட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Amillo Gonsalves - viv richards

எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படும் ரிச்சர்ட்ஸ், 121 டெஸ்ட் மற்றும் 187 ODI போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 50-க்கும் அதிகமான சராசரியுடன் 8540 ரன்கள் அடித்திருக்கும் ரிச்சர்ட்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் 6721 ரன்கள் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 36000 ரன்களை பதிவுசெய்திருக்கும் விவ், லிஸ்ட் ஏ போட்டிகளில் கிட்டத்தட்ட 17000 பதிவுசெய்து அசத்தியுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 47 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரிச்சர்ட்ஸ் 27 போட்டிகளில் வெற்றிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அவர் தலைமையில் விண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை இழந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.