இந்தியா - பாகிஸ்தான் டாஸ் சர்ச்சை x
கிரிக்கெட்

IND vs PAK மகளிர் போட்டியில் சர்ச்சை| பாகிஸ்தான் கேப்டன் ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் காட்டம்!

2025 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் போடும்போது ஏற்பட்ட குழப்பத்தால் பாகிஸ்தான் கேப்டன் மீது இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Rishan Vengai

2025 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் போடும்போது ஏற்பட்ட குழப்பத்தால் பாகிஸ்தான் கேப்டன் மீது இந்திய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 2 வரை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.

இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெற உள்ளநிலையில், இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

ind vs sl

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி, தங்களுடைய 2வது போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடிவருகிறது.

பாகிஸ்தான் கேப்டன் ஏமாற்றினாரா..?

இலங்கை கொழும்புவில் பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் போடுவதில் குழப்பம் ஏற்பட்டது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நாணயத்தை தூக்கிப்போட பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா ‘டெயில்ஸ்’ என அழைப்பு விடுத்தார். ஆனால் அதை போட்டி நடுவர் தவறாக ‘ஹெட்ஸ்’ என புரிந்துகொண்டு விழுந்தது ’ஹெட்ஸ்’ பாகிஸ்தான் கேப்டன் டாஸ் வென்றதாக அறிவித்தார்.

இதற்கு நான் ஹெட்ஸ் கேட்கவில்லை டெயில்ஸ் தான் கேட்டேன் என பாகிஸ்தான் கேப்டன் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இந்த விசயத்தை தற்போது சமூகவலைதளத்தில் பகிர்ந்துவரும் இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் கேப்டன் ஏமாற்றிவிட்டதாக பதிவிட்டுவருகின்றனர்.

இதுபோக டாஸ் போடும்போது இந்தியா-பாகிஸ்தான் கேப்டன்கள் இருவரும் கைகுலுக்குவதை தவிர்த்துக்கொண்டனர்.

முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 23 ஓவர் முடிவில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்க வீரர்கள் ஸ்மிருதி மற்றும் பிரதிகா அவுட்டான நிலையில், ஹர்லீன் தியோல் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேட்டிங் செய்து வருகின்றனர்.