Model image google gemeni
கிரிக்கெட்

CWG 2026 | பதக்க வேட்டை நடத்தும் இந்தியா.. இதுவரை எத்தனை? வென்றவர்கள் யார்?

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை எத்தனை வென்றுள்ளது, யார் யார் வென்றனர் என்பது குறித்துப் பார்ப்போம்.

Prakash J

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். அந்த வகையில், கொட்டும் கனமழைக்கு இடையே நேற்று நடைபெற்றஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் இரண்டாவது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார். பெண்கள் 69 கிலோ பளுதூக்குதல் பிரிவில் ஹர்ஜிந்தர் கவுர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது.

இதுவரை இந்தியா தங்கம் (2), வெள்ளி (7), வெண்கலம் (3) என 12 பதக்கங்களை வென்று பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. 2026 போட்டிகளில் இதுவரை இந்தியாவுக்கு அதிகபட்சமாக 6 பதக்கங்களைப் பெற்றுத் தந்த விளையாட்டாக பளுதூக்குதல் திகழ்கிறது. பளுதூக்குதல் மகளிர் பிரிவில் மீராபாய் சானுவும், பாரா தடகளத்தில் மகளிர் குண்டு எறிதலில் ஷர்மிளா தன்கரும் தங்கப்பதக்கம் வென்றனர்.

பளுதூக்குதல் ஆண்கள் பிரிவில் ரிஷிகந்தா சிங், முத்துப்பாண்டி ராஜா, அஜயா பாபு ஆகியோரும், மகளிரி பிரிவில் ஞானேஸ்வரி யாதவ், ஹரிஜிந்தர் கவுர் ஆகியோரும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். தடகளத்தில் உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷேர் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். அடுத்து, பாரா பளுதூக்குதல் ஆண்கள் பிரிவில் ஜாண்டு குமாரும், பளுதூக்குதல் பெண்கள் பிரிவில் பிந்தியாராணி தேவியும், பாரா தடகளத்தில் பெண்கள் பிரிவில் குண்டு எறிதலில் ஷில்பா ஷியலா ஆகியோரும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

மீராபாய் சானு

மீராபாய் சானு - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை

ஷர்மிளா தன்கர் - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் பாரா-தடகள தங்கப் பதக்கத்தை வென்று சாதனை

சர்வேஷ் குஷாரே - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர்

குல்வீர் சிங் - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்

பிந்த்யாராணி தேவி - இரண்டாவது காமன்வெல்த் பதக்கத்தை வென்றார்