champions trophy alltime records PT
கிரிக்கெட்

அதிக சதங்கள், அதிகபட்ச ஸ்கோர், டோட்டல்.. சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றின் 28 சாதனைகள்! முழு விவரம்!

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இதுவரை படைக்கப்பட்ட அனைத்துவிதமான சாதனைகளையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்..

Rishan Vengai

அதிக வெற்றிகள் - இந்தியா

2013 சாம்பியன்ஸ் டிராபி

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 29 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி, 18 வெற்றிகளை பெற்று அதிகமான வெற்றியை பதிவுசெய்த அணியாக முதலிடத்தில் உள்ளது.

அதிக தோல்விகள்- பாகிஸ்தான்

2017 சாம்பியன்ஸ் டிராபி

23 போட்டிகளில் விளையாடியிருக்கும் பாகிஸ்தான் அணி 12 தோல்விகளை சந்தித்து, அதிக தோல்விகளை பதிவுசெய்த அணியாக நீடிக்கிறது.

அதிகபட்ச டோட்டல் - நியூசிலாந்து

2004-ம் ஆண்டு ஓவலில் அமெரிக்காவிற்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 347 ரன்களை குவித்தது.

குறைந்தபட்ச டோட்டல் - அமெரிக்கா

2004-ம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமெரிக்கா 65 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மிகப்பெரிய வெற்றி (by runs) - நியூசிலாந்து

2004-ம் ஆண்டு ஓவலில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி அமெரிக்காவை 210 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மிகப்பெரிய வெற்றி (by wickets) - வெஸ்ட் இண்டீஸ்

2006-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

குறைந்த ரன் வித்தியாசத்தில் வெற்றி - இந்தியா

2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

குறைந்த விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி - நியூசிலாந்து

2013-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதிக ரன்கள் - கிறிஸ் கெய்ல்

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் 17 போட்டிகளில் விளையாடி 791 ரன்கள் அடித்துள்ளார்.

விராட் கோலி 13 போட்டிகளில் விளையாடிய 529 ரன்களுடன் 263 ரன்கள் பின்தங்கியுள்ளார். நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் கிங் கோலி கெய்லின் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.

அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் - நாதன் ஆஸ்டில்

நாதன் ஆஸ்டில்

2004-ல் நடந்த அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தின் நாதன் ஆஸ்டில் 151 பந்துகளில் 145 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் - விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி 13 போட்டிகளில் விளையாடி 529 ரன்களுடன் 88.16 சராசரியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

அதிக ஸ்டிரைக்ரேட் வைத்திருக்கும் வீரர் - ஷிகர் தவான்

ஷிகர் தவான்

இந்தியாவின் ஷிகர் தவான் 10 போட்டிகளில் விளையாடி 701 ரன்களுடன் 101.59 ஸ்டிரைக் ரேட்டுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

அதிக சதங்கள் - 4 வீரர்கள்

ganguly

இந்தியா - ஷிகர் தவான், சவுரவ் கங்குலி - 3 சதங்கள்

வெஸ்ட் இண்டீஸ் - கிறிஸ் கெய்ல் - 3 சதங்கள்

தென்னாப்பிரிக்கா - ஹெர்ஷல் கிப்ஸ் - 3 சதங்கள்

அதிக அரைசதங்கள் - ராகுல் டிராவிட்

rahul dravid

 இந்தியாவின் ராகுல் டிராவிட் 6 அரைசதங்கள் அடித்து முதல் வீரராக இருக்கிறார்.

அதிக முறை டக் அவுட் - ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 17 போட்டிகளில் 4 முறை பூஜ்ஜியத்தில் வெளியேறியுள்ளார்.

அதிக சிக்ஸர்கள் - சவுரவ் கங்குலி

கங்குலி

இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 13 போட்டிகளில் 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் - 2 வீரர்கள்

2004 vs அமெரிக்கா - நியூசிலாந்தின் கிரெய்க் மெக்மில்லன் 7 சிக்சர்கள்

2009 vs இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 7 சிக்ஸர்கள்.

ஒரு தொடரில் அதிக ரன்கள்- கிறிஸ் கெய்ல்

2006-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் எட்டு போட்டிகளில் 474 ரன்கள் எடுத்தார்.

அதிக விக்கெட்டுகள் - கைல் மில்ஸ்

Kyle Mills

நியூசிலாந்தின் கைல் மில்ஸ் 15 போட்டிகளில் 28 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

சிறந்த பந்துவீச்சு - ஃபர்வீஸ் மஹரூஃப்

Farveez Maharoof

2006-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இலங்கை பவுலர் ஃபர்வீஸ் மஹரூஃப் 9 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் - 1 முறை 11 வீரர்கள்

jadeja

ஷெய்ன் ஓ'கானர் - நியூசிலாந்து

ஃபர்வீஸ் மஹரூஃப் - இலங்கை

ஜோஷ் ஹேசில்வுட் - ஆஸ்திரேலியா

ரவீந்திர ஜடேஜா - இந்தியா

வெய்ன் பார்னெல் - தென்னாப்பிரிக்கா

மகாயா நிடினி - தென்னாப்பிரிக்கா

ஜேக்கப் ஓரம் - நியூசிலாந்து

மெர்வின் தில்லன் - வெஸ்ட் இண்டீஸ்

ஷாஹித் அஃப்ரிடி - பாகிஸ்தான்

கிளென் மெக்ராத் - ஆஸ்திரேலியா

ஜாக் காலிஸ் - தென்னாப்பிரிக்கா

ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் - ஹசன் அலி

hasan ali

2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானின் ஹசன் அலி ஐந்து போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதிக ஆட்டமிழப்புகள் - குமார் சங்ககரா

குமார் சங்ககரா

இலங்கையின் விக்கெட் கீப்பர் குமார் சங்கக்கரா 28 கேட்சுகள், 5 ஸ்டம்பிங்கில் ஈடுபட்டு 33 ஆட்டமிழப்புகளில் பங்கேற்றுள்ளார்.

அதிக கேட்சுகள் - ஜெயவர்த்தனே

ஜெயவர்த்தனே

இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே 22 போட்டிகளில் 15 கேட்சுகளை பிடித்துள்ளார்.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப் - ஷேன் வாட்சன் மற்றும் ரிக்கி பாண்டிங்

2009-ம் ஆண்டு செஞ்சுரியனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக, ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தனர்.

அதிக போட்டிகள் - ஜெயவர்த்தனே & சங்ககரா

இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே மற்றும் குமார் சங்கக்காரா இருவரும் தலா 22 போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

கேப்டனாக அதிக வெற்றிகள் - ரிக்கி பாண்டிங்

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 16 போட்டிகளில் 12 வெற்றிகளை பதிவுசெய்துள்ளார்.

கோப்பை வென்ற அணிகள் - 7

தென்னாப்பிரிக்கா - 1998

நியூசிலாந்து - 2000

இந்தியா மற்றும் இலங்கை - 2002 (பகிரப்பட்டது)

மேற்கிந்திய தீவுகள் - 2004

ஆஸ்திரேலியா - 2006, 2009

இந்தியா - 2013

பாகிஸ்தான் - 2017