பிசிசிஐ எக்ஸ் தளம்
கிரிக்கெட்

உள்ளூர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்.. 2.5 மடங்கு சம்பளத்தை உயர்த்திய பிசிசிஐ!

உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடும் மகளிர் வீராங்கனைகளுக்கு ஒரு பெரிய ஊதிய உயர்வை பிசிசிஐ வழங்கியுள்ளது. புதிய திட்டத்தின்படி, அவர்களுக்கு தற்போதைய போட்டிக் கட்டணத்தைவிட 2.5 மடங்கு கிடைக்கப்பட இருக்கிறது.

Prakash J

உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடும் மகளிர் வீராங்கனைகளுக்கு ஒரு பெரிய ஊதிய உயர்வை பிசிசிஐ வழங்கியுள்ளது. புதிய திட்டத்தின்படி, அவர்களுக்கு தற்போதைய போட்டிக் கட்டணத்தைவிட 2.5 மடங்கு கிடைக்கப்பட இருக்கிறது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிர் அணியும் அனைத்துவிதமானப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடும் மகளிர் வீராங்கனைகளுக்கு ஒரு பெரிய ஊதிய உயர்வை பிசிசிஐ வழங்கித் தயாராகி உள்ளது. புதிய திட்டத்தின்படி, அவர்களுக்கு தற்போதைய போட்டிக் கட்டணத்தைவிட 2.5 மடங்கு கிடைக்கப்பட இருக்கிறது. பிசிசியின் பொதுக்கூட்டம் நேற்று (டிச.22) நடைபெற்றது. அப்போது இதுகுறித்த மாற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் அவர்கள், ஒருநாளைக்கு ரூ.50,000 வரை சம்பாதிக்க உள்ளனர். முன்னதாக, இவர்கள் ஒருநாளைக்கு போட்டிக் கட்டணமாக ரூ.20,000 மட்டுமே பெற்றனர்.

bcci

இந்த உயர்வு, ஆடும் லெவனில் உள்ள வீராங்கனைகளுக்கு மட்டுமல்லாது, ரிசர்வ் வீரர்களாக பெயரிடப்பட்ட அணி உறுப்பினர்களின் போட்டிக் கட்டணத்திலும் குறிப்பிடத்தக்க உயர்வு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மூத்த ரிசர்வ் வீராங்கனைகளுக்கு ஒருநாளைக்கு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, இது ரூ.10,000 ஆக இருந்தது. இது, பெண்கள் விளையாட்டுக்கு ஒரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் BCCI தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மிதுன் மன்ஹாஸின் தலைமையின் கீழ், பெண்கள் கிரிக்கெட்டை வளர்ப்பதில் வாரியம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2021ஆம் ஆண்டு மகளிர் போட்டிக் கட்டணத்தைத் திருத்திய பிசிசிஐ, மூத்த வீராங்கனைக்கு தினசரி சம்பளமாக ரூ.12,500 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி இருந்து.