babar azam web
கிரிக்கெட்

குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் 500+ ரன்கள்.. டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாம் மோசமான சாதனை!

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் 500 ரன்கள் அடித்த வீரர் என்ற மோசமான சாதனை படைத்துள்ளார் பாகிஸ்தானின் பாபர் அசாம்.

Rishan Vengai

பாபர் அசாம், 2026 டி20 உலகக்கோப்பையில் 500 ரன்களை மிகக் குறைந்த ஸ்ட்ரைக்ரேட்டில் கடந்து மோசமான சாதனை படைத்தார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடந்துவருகிறது. 20 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் இத்தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் போட்டியை சுற்றியிருந்த குழப்பத்தை ஐசிசி நீக்கியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாட சம்மதித்து உள்ளது.

இந்திய போட்டிக்கு முன்னதாக நெதர்லாந்தை தோற்கடித்த பாகிஸ்தான் அணி, இன்று நடக்கும் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டு விளையாடுகிறது.

மோசமான சாதனை படைத்த பாபர் அசாம்..

இலங்கை கொழும்புவில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பாகிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 41 பந்தில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 73 ரன்கள் அடித்து அசத்தினார்.

சாஹிப்சாதா ஃபர்ஹான்

ஆனால் மறுமுனையில் பேட்டிங் செய்த பாபர் அசாம் முதல் 18 பந்தில் 14 ரன்களை மட்டுமே அடித்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பின்னர் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என அடித்த பாபர் அசாம் 46 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய மற்ற பேட்டர்கள் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.

இந்தசூழலில் டி20 உலகக்கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்களை, மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் கடந்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் பாபர் அசாம்.

பாபர் அசாம்

குறைவான ஸ்ட்ரைக்ரேட்டில் 500 ரன்கள்:

பாபர் அசாம் - 110.4

மொஹமத் ஹஃபீஷ் - 111.8

குமார் சங்கக்கரா - 112.2

கேன் வில்லியம்சன் - 112.5