விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம் web
கிரிக்கெட்

டி20 கிரிக்கெட் வரலாறு.. விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் பிரத்யேக சாதனையை முறியடித்தார் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம்..

Rishan Vengai

பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அரைசதமடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த சாதனையை முறியடித்தார்.

2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

பாபர் அசாம்

பரபரப்பாக நடைபெற்ற தொடரில் 3 போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி, 3 போட்டிகளையும் வென்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது.

இத்தொடரில் 3வது டி20 போட்டியில் அரைசதமடித்த பாபர் அசாம் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.

கோலி சாதனையை முறியடித்த பாபர்..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி 207 ரன்களை குவித்து அசத்தியது. இதில் 4வது வீரராக களமிறங்கி விளையாடிய பாபர் அசாம் 36 பந்தில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர்களுடன் 50* ரன்கள் அடித்து அசத்தினார்.

பாபர் அசாம்

இப்போட்டியில் அடிக்கப்பட்ட பாபர் அசாமின் டி20 அரைசதம் 39வது அரைசதமாகும். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்திருந்த விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்.

விராட் கோலி

டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்:

பாபர் அசாம் - 39*

விராட் கோலி - 38

ரோகித் சர்மா - 32

முகமது ரிஸ்வான் - 30

டேவிட் வார்னர் / ஜோஸ் பட்லர் - 28