8வது முறையாக டி20 உலகக்கோப்பை ஃபைனல் சென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி cricinfo
கிரிக்கெட்

மகளிர் டி20 WC அரையிறுதி| 125 ரன்கள் மட்டுமே அடித்த WI.. 8வது FINAL செல்லும் ஆஸ்திரேலியா!

2026 மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப்போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

Rishan Vengai

2026 மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் லண்டன் ஓவலில் ஆஸ்திரேலியா அற்புத பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸை 20 ஓவரில் 125/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. 2016 இறுதியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்ற நினைவுகள் இருந்தாலும், இப்போது 126 ரன்கள் இலக்கை 10 ஓவரில் 97 ரன்கள் எட்டி வெற்றிக்கு நெருங்கி, 8வது முறையாக ஃபைனலுக்கு செல்லும் சாதனைக்குத் தகுதிபெற உள்ளது.

2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெற்றன.

இந்நிலையில் முதல் அரையிறுதிப்போட்டியானது பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா மகளிர் அணி பலம்வாய்ந்த அணியாகவே இருந்தாலும் 2016 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்துள்ளது என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய முதல் அரையிறுதிப்போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி, வெஸ்ட் இண்டீஸை 20 ஓவரில் 125/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. 126 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிவரும் ஆஸ்திரேலியா அணி 10 ஓவரில் 97 ரன்கள் அடித்து வெற்றிக்கு மிக அருகில் உள்ளது.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்றால் 6 முறை கோப்பை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, ஒருமுறை ரன்னராக வந்ததை சேர்த்து 8வது முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியாக சாதனை படைக்கும்.