india won asian games t20 final x/ bcci
கிரிக்கெட்

Asian Games| அனல்பறந்த INDvsPAK ஃபைனல்.. 96 ரன்கள் அடித்து பயம்காட்டிய PAK வீரர்! இந்தியா வெற்றி!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா..

Rishan Vengai

ஆசிய விளையாட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் ஃபைனலில் பரபரப்பான போட்டி நடந்தது. 211 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான், ஹசன் நவாஸ் 96 ரன்கள் அடித்தாலும், 192 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.

2026 ஆசிய விளையாட்டின் ஒரு அங்கமாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டியில் இலங்கையை தோற்கடித்து தங்கம் வென்று சாதித்தது.

இந்தசூழலில் ஆடவர் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியானது இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக 7 சிக்சர்களுடன் அபிஷேக் சர்மா 61 ரன்களும், 4 சிக்சர்களுடன் திலக்வர்மா 51 ரன்களும் அடித்தனர். கடைசியாக களமிறங்கி அதிரடிகாட்டிய ஷிவம் துபே 15 பந்தில் 27 ரன்கள் அடித்தார்.

212 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய பாகிஸ்தான் அணியில் டாப் 3 வீரர்கள் சுமாராகவே ஆரம்பித்தாலும், 4வது வீரராக விளையாடிய ஹசன் நவாஸ் இறுதிவரை இந்தியாவிற்கு ஆட்டம் காமித்தார். 5 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என அடித்த அவர் 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த வந்த வீரர்கள் முயற்சித்தபோதும் பாகிஸ்தான் அணி 192 ரன்கள் மட்டுமே அடித்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

india t20 team - asian games

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டில் இந்தியாவிற்கு இன்னொரு தங்கம் உறுதியானது. பாகிஸ்தான் வெள்ளி வென்றது.