இந்தியா - நியூசிலாந்து டி20 தொடரில் அர்ஷ்தீப் சிங் வரலாற்று சாதனை படைக்க தயாராக உள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் நடக்கவிருக்கும் நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வரலாறு படைக்கும் தருவாயில் உள்ளார்.
2022-ல் தனது டி20ஐ அறிமுகப் போட்டியில் விளையாடியதிலிருந்து. அர்ஷ்தீப் சிங் குறுகிய வடிவப் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் அதிக டி20ஐ விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்ற அவர், தொடர்ந்து தனது விக்கெட் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார்.
99 டி20 போட்டிகளில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 20.30 என்ற சராசரியில் 145 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது சாதனையில் இரண்டு முறை நான்கு விக்கெட்டுகளும். ஒரு முறை ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும், அவரது சிறந்த பந்துவீச்சு 5/51 ஆகும்.
இன்னும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், அர்ஷ்தீப் டி20 சர்வதேசப் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எட்டிய ஒன்பதாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். மேலும், இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுவார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் தற்போது 118 போட்டிகளில் 197 விக்கெட்டுகளுடன் எல்லாக் காலத்திற்குமான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.