anand mahindra
anand mahindra pt web
கிரிக்கெட்

"Hello, Isaac Newton?" வானத்தில் பந்தை தடுத்த விராட்...நியூட்டனை துணைக்கு அழைக்கும் ஆனந்த் மஹிந்திரா

Angeshwar G

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மாவின் அசத்தலான சதம் மற்றும் ரின்கு சிங்கின் 69 ரன்கள் ஆட்டத்தால் 212 ரன்களை பதிவுசெய்தது. எப்படியும் இந்தியாதான் வெற்றிபெறும் என்று நினைத்த போட்டியில், ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் இப்ராஹின் ஜத்ரான் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு வெற்றியை ஏற்படுத்திக்கொடுத்தனர். அதை அப்படியே பிடித்துக்கொண்ட நபி மற்றும் குல்பதின் நயப் இருவரும் கடைசிவரை போராட, இறுதிபந்து வரை சென்ற போட்டி டிரா செய்யப்பட்டது.

ind vs afg

இரண்டு அணிகளும் 212 ரன்களை பதிவுசெய்த நிலையில், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்களை எடுத்தது. இந்தியாவும் 16 ரன்களை எடுக்க போட்டி இரண்டாவது சூப்பர் ஓவரை நோக்கி சென்றது. இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்திய அணி 12 ரன்கள்தான் எடுத்தது. இருந்தபோதும் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களின் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் 16-ஆவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். அதன் 5-ஆவது பந்தினை ஜானத் எதிர்கொண்டார். ஜானத் மட்டையை சுழற்ற மிக உயரத்தில் லாங் ஆன் திசையில் சென்ற பந்தினை எல்லைக்கோட்டின் அருகே குதித்து அந்தப் பந்து சிக்ஸருக்கு செல்லாமல் விராட் கோலி தடுத்தார். அந்தப் பந்தினை விராட் கேட்சாக மாற்றவில்லை என்றாலும், அந்த பந்தில் 5 ரன்களை விராட் கோலி சேமித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இதுகுறித்தான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “Hello, ஐசக் நியூட்டன்? புவியீர்ப்பின் எதிர்ப்பு நிகழ்வைக் கணக்கிட, இயற்பியலின் புதிய விதியை வரையறுக்க எங்களுக்கு உதவ முடியுமா?” என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பதிவிற்கு கீழ் ஏராளமான நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.