Anahat Singh x page
கிரிக்கெட்

21 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய நட்சத்திரம்.. எதில் தெரியுமா?

மூத்தோர் பிரிவில் உலகத் தரவரிசையில் 20-ஆவது இடத்தில் இருக்கும் டெல்லியைச் சேர்ந்த அனாஹத் சிங், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash J

க​ன​டா​வின் ஆன்​டாரியோ நகரில் நடைபெறும் உலக ஸ்கு​வாஷ் ஜூனியர் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு, இந்தியாவின் அனாஹத் சிங் முன்னேறியுள்ளார். இதன்மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கனடாவின் ஆன்டாரியோ நகரில் (நயாகரா-ஆன்-தி-லேக்) உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 2026 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான 18 வயதான அனாஹத் சிங், அரையிறுதியில் எகிப்தின் பர்ப் சமேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அனாஹத் சிங் 11-3, 8-11, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ஆம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இறுதிப்போட்டியில் அனாஹத் சிங், எகிப்தின் இரண்டாம் நிலை வீராங்கனையான ருக்காயா சேலத்தை எதிர்கொள்கிறார். இந்தத் தொடரில் பட்டம் வெல்லும் பட்சத்தில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றை அவர் படைப்பார். மூத்தோர் பிரிவில் உலகத் தரவரிசையில் 20-ஆவது இடத்தில் இருக்கும் டெல்லியைச் சேர்ந்த அனாஹத் சிங், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.