india vs sri lanka pti
கிரிக்கெட்

45 ரன்னுக்கு ஆல்அவுட்.. RCB சாதனையை முறியடித்த இலங்கை! ஒரே போட்டியில் 4 படுமோசமான Records!

இந்தியாவிற்கு எதிரான ஆசிய விளையாட்டு அரையிறுதி டி20 போட்டியில் 45 ரன்னுக்கு சுருண்ட இலங்கை அணி 4 படுமோசமான சாதனைகளை படைத்துள்ளது.. விவரத்தை பார்க்கலாம்..

Rishan Vengai

2026 ஆசிய விளையாட்டின் ஒரு அங்கமாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. லீக் போட்டிகள் முடிவில் நடைபெற்ற 2வது அரையிறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை மோதின.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா இஷான் கிஷனின் 80 ரன்கள் ஆட்டத்தால் 169 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45 ரன்னுக்கு சுருண்டு ஆல்அவுட்டானது. இப்போட்டியில் டி20 வரலாற்றில் தேவையற்ற 4 படுமோசமான சாதனைகளை இலங்கை அணி படைத்துள்ளது.

124 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியாவிற்கு எதிராக 124 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி, ஒரு அரையிறுதிப்போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோற்கும் முதல் டெஸ்ட் விளையாடும் நாடு என்ற மோசமான சாதனையை படைத்தது.

45 ரன்னுக்கு ஆல்அவுட்..

சர்வதேச டி20 போட்டியில் மிகக்குறைவான ரன்னுக்கு சுருண்ட முழு உறுப்பினர் நாடு என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் உடன் பகிர்ந்துகொண்டது இலங்கை. 45 ரன்னுக்கு ஆல் அவுட்டான இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன.

அதிக பேர் டக் அவுட்..

இந்தப்போட்டியில் இலங்கை வீரர்கள் 5 பேர் டக் அவுட்டில் வெளியேறினர். இதன்மூலம் முழு உறுப்பினர் நாடுகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக டக் அவுட் ஆன நாடாக 2வது இடத்தை பிடித்துள்ளது இலங்கை. முதல் இடத்தில் 6 டக் அவுட்டுடன் ஜிம்பாப்வே உள்ளது.

ஓரிலக்க ரன்

இந்தியாவிற்கு எதிரான இன்னிங்ஸில் 45 ரன்னில் சுருண்ட இலங்கை அணியில் 9 வீரர்கள் ஓரிலக்க ரன்களில் அவுட்டாகினர். இதன்மூலம் ஒரு டி20 இன்னிங்ஸில் அதிகபேர் ஓரிலக்க ரன்னில் அவுட்டான 2வது முழு உறுப்பினர் நாடாக இலங்கை இணைந்தது. முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் நீடிக்கிறது.