பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். அவர் சூர்யகுமார் யாதவ் தனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார் எனக் கூறியுள்ளார். இது டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறியிருக்கும் விசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகக்கோப்பைக்கு முன்னதாக ஃபார்ம் அவுட்டில் இருந்து சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் பேட்டிங் சார்ந்து நிறைய விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஐபிஎல்லில் சிறந்த ஃபார்மில் இருந்த சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்காக விளையாடிய கடைசி 19 போட்டிகளில் ஒன்றில் கூட அரைசதம் அடிக்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஃபார்மிற்கு திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கை இருந்துவரும் சூழலில், பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் நடிகை குஷி முகர்ஜி, ”நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. எனக்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் மெசேஜ் அனுப்புவார்கள். அவர் பெயர் கூட, சூர்யகுமார் யாதவ். அவர் எனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார். இப்போது நாங்கள் அதிகம் பேசுவதில்லை, நான் தொடர்பு கொள்ளவும் விரும்பவில்லை. யாருடனும் என்னுடைய பெயர் இணைத்து பேசப்படுவதில் எனக்கு விருப்பமில்லை” என்று பேசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து நடிகை ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சூர்யகுமார் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.