கில் - டி வில்லியர்ஸ் web
கிரிக்கெட்

’கில்லை ODI கேப்டனாக்கியது சரியான முடிவு..’ - ஏபிடி வில்லியர்ஸ் ஆதரவு!

சுப்மன் கில்லை ஒருநாள் கேப்டனாக தேர்வுசெய்தது விவேகமான முடிவு என்று ஏபிடி வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

சுப்மன் கில்லை ஒருநாள் கேப்டனாக தேர்வுசெய்தது விவேகமான முடிவு என்று ஏபிடி வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதற்கு ஏபி டிவில்லியர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார் . அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் இருப்பு சார்ந்த நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, கில்லை தலைவராக நியமிப்பது ஒரு விவேகமான முடிவு என்று பாராட்டியுள்ளார்.

virat kohli - rohit sharma

2027 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவிடமிருந்த கேப்டன் பொறுப்பை சுப்மன் கில்லுக்கு கைமாற்றியுள்ளது இந்திய தேர்வுக்குழு. அடுத்தடுத்து 2 கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டனாக இருந்தாலும், 38 வயதான ரோகித் சர்மாவின் வயதுமூப்பு மற்றும் ஃபிட்னஸ் பிரச்னையை கருத்தில்கொண்டு இந்தமுடிவை தேர்வுக்குழு தைரியமாக எடுத்துள்ளது.

Gill

கேப்டன்சி மாற்றம் குறித்து பேசியிருந்த அஜித் அகர்கர் கூட, இப்போது கேப்டன் பொறுப்பை சுப்மன் கில்லிடம் ஒப்படைத்தால் தான், அவரால் 2027 உலகக்கோப்பைக்கு தயாராக முடியும் என்று கூறியிருந்தார்.

கில்லை கேப்டனாக்கியது சரியான முடிவு..

இந்தசூழலில் கில்லை ஒருநாள் கேப்டனாக்கிய இந்தியாவின் முடிவை ஏபிடி வில்லியர்ஸ் ஆதரத்துள்ளார். இதுகுறித்து அவருடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் டி வில்லியர்ஸ், “அடுத்த உலகக் கோப்பையில் அவர்கள் இருவரும் இருப்பார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை, இது சுப்மன் கில்லை ஒருநாள் போட்டியின் கேப்டனாக மாற்றியதற்கான ஒரு காரணமாக இருக்கலாம். இளம் திறமைசாலியாக சிறந்த ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில், 2027 உலகக்கோப்பையில் சிறந்த தலைவர் சிறப்பாக செயல்படுவார். ரோகித் மற்றும் விராட்டை சுற்றி நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது இதுவொரு விவெகமான முடிவு என்று நான் நம்புகிறேன்,

gill - de villiers

அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த ரோகித் மற்றும் விராட் கோலியிடமிருந்து கற்றுக்கொள்ள சுப்மனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் அருகில் இருப்பது அவருக்கு விலைமதிப்பற்றதாக இருக்கும். சுற்றுப்பயணம் விரைவில் நெருங்கி வருவதால், ஒரு உயர்தர பொழுதுபோக்கு மற்றும் அற்புதமான தொடரை நாம் எதிர்பார்க்கலாம்" என்று டிவில்லியர்ஸ் பேசியுள்ளார்.