sangeeta phogat lifts yuzvendra chahal
sangeeta phogat lifts yuzvendra chahal web
கிரிக்கெட்

‘தலை சுத்துது நிறுத்துமா’ - பிராக் லெஸ்னர் போல் சாஹலை தூக்கி சுற்றிய மல்யுத்த வீராங்கனை! #ViralVideo

Rishan Vengai

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த லெக் ஸ்பின்னர் பவுலராக ஜொலித்து வந்த யுஸ்வேந்திர சாஹல், இந்திய அணிக்காக அதிக டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர், ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் உட்பட பல சாதனைகளை தன்வசம் வைத்திருக்கிறார்.

இந்திய அணிக்காக 79 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 25 சராசரியுடன் 96 விக்கெட்டுகளையும், ஐபிஎல்லில் 145 போட்டிகளில் விளையாடிய 21 சராசரியும் 187 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆனால் சமீப காலமாக இந்திய அணி இவரை ஓரங்கட்டி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பிசிசிஐ-ன் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்தும் சாஹலின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சாஹலுக்கு பதிலாக இந்திய டி20 அணியில் ரவி பிஸ்னோய் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.

Chahal

இந்திய அணியில் இடம்பெறாமல் போனாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் சாஹல், எதாவது ஒரு தலைப்பில் டிரெண்டிங்கில் இருக்கக்கூடியவர். அப்படித்தான் தற்போதும் ஒரு வீடியோ மூலம் சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கில் இருந்துவருகிறார்.

சாஹலை தோளில் தூக்கிவைத்து சுத்திய மல்யுத்த வீராங்கனை!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் இருவரும் ஜலக் திக்லா ஜா ரேப்-அப் என்ற பார்ட்டியில் பங்கேற்றனர். அப்போது யுஸ்வேந்திர சாஹலை தோளில் தூக்கிவைத்து மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் சுற்றியுள்ளார். இந்த நகைச்சுவை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், யுஸ்வேந்திர சாஹலை சங்கீதா போகத் தூக்கி சுற்றுகிறார். தலை சுற்றுவது போல் இருக்கவும் சாஹல் தன்னுடைய கையை உயர்த்தி நிறுத்துங்கள் என்பது போல் சைகை செய்கிறார். ஆனாலும் ரெஸ்லிங் வீரர் பிராக் லெஸ்னர் போல் நன்றாக சுற்றிய சங்கீதா போகத் பிறகு இறக்கிவிடுகிறார். தற்போது பாவம் பா சாஹல் என இணையத்தில் வீடியோவை டிரெண்ட் செய்துவருகின்றனர்.

சாஹலின் வீடியோ வைரலாகும் அதேநேரத்தில், யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா நடனக்கலைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தால் விமர்சிக்கப்பட்டுவருகிறார். அவர் நடன ரியாலிட்டி ஷோ ஒன்றில் பைனலிஸ்ட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது.