லியம் டாசன் cricinfo
கிரிக்கெட்

IND vs ENG| 'அதிக வயதில் முதல் ODI சதம்..' இங்கிலாந்து வீரர் படைத்த விநோத சாதனை!

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 80-க்கு 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, ஆல்ரவுண்டர் லியம் டாசனின் அற்புதமான அரைசதத்தால் வலுவாக திரும்பி வந்தது.

Rishan Vengai

இந்தியா-இங்கிலாந்து மோதிய முதல் ஒருநாள் போட்டியில், தொடக்கத்தில் 107/6 என சரிந்த இங்கிலாந்தை 8வது வீரராக வந்த ஆல்ரவுண்டர் லியம் டாசன் காப்பாற்றினார். ஜோ ரூட்டுடன் 100 ரன்கள் கூட்டணியை அமைத்து, 83 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து 68 ரன்கள் குவித்தார். இதன் மூலம் அதிக வயதில் அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 4-0 என இந்தியாவை இங்கிலாந்து தோற்கடித்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

INDIA ODI Team 2026

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நல்ல தொடக்கத்தை பெற்றபோதும் 80 ரன்களை எட்டுவதற்குள் கொத்து கொத்தாக 5 விக்கெட்டுகளை இழந்தது. 107 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் சரிந்த பிறகு இங்கிலாந்து 150 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 8வது வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் லியம் டாசன் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஜோ ரூட் உடன் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உண்டாக்கினார்.

83 பந்தில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 68 ரன்களுக்கு ஆட்டமிழந்த அவர், சர்வதேச ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவுசெய்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வயதில் அரைசதமடித்த 2வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார். இதற்கு முன்பு இங்கிலாந்தின் ஜெஃப்ரி பாய்காட் 38 வயதில் இதை செய்திருந்த நிலையில், டாசன் 36 வயதில் செய்து அசத்தியுள்ளார்.